தமிழக மக்களிடம் இருந்து எப்போதும் அவுட் ஆப் கண்ட்ரோலில் மத்திய அரசு இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ''முதலமைச்சர் தமிழக மக்களிடம் இருந்து அவுட் ஆப் கான்டக்ட்-ல் இருப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பங்கேற்று இருந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தார். பாஜக உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சமீபத்திய தமிழக வருகையை சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலின் தனது கருத்தை தெரிவிக்கும் போது அமித்ஷா அல்ல... எத்தனை ஷாக்கள் தமிழ்நாட்டில் வந்தாலும் தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது என்று முதலமைச்சர் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: மத்தியில் பாஜக அரசுக்கு நாங்கதான் எதிர்கட்சி… கங்கிரஸை கதறவிட்டு கெத்துக் காட்டும் மு.க.ஸ்டாலின்..!

அத்தோடு தமிழ்நாடு எப்போதுமே டெல்லியின் ஆளுகைக்கு உள்ளாக இருக்காது என்று சுட்டிக்காட்டி தமிழ்நாடு எப்போதுமே டெல்லியிடமிருந்து அவுட் ஆப் கண்ட்ரோலில் இருக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முதலமைச்சருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அண்ணாமலை தனது எக்ஸ்தளப்பதிவில், '' முதலமைச்சர் கூறியபடி அவர் அவுட் ஆப் கண்ட்ரோலில் இல்லை. உண்மை நிலவரம் என்னவென்றால் மு.க.ஸ்டாலின் அவுட் ஆப் கான்டாக்ட்-ல் இருக்கின்றார்.

தமிழக மக்களிடம் இருந்து அவுட் ஆப் கான்டெக்ட்ல் இருக்கிறார். மு.க.ஸ்டாலின் தமிழக மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு நிற்கிறார். முதலமைச்சருக்கும், மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை போன்ற ஆட்சி தான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சரின் செயல்பாடு காரணமாக மத்திய அரசுடன் மோதல் போக்கை ஏற்படுத்திக் கொண்டிருப்பதால் தமிழக மக்கள் எப்போதும் அச்சத்திலேயே இருக்கிறார்கள்.

டெல்லியிடம் இருந்து அவுட் ஆப் கண்ட்ரோலில் தான் இருப்போம் என்று முதலமைச்சர் தெரிவித்து வருகிறார். மக்களுக்கும், முதல்வருக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லாத ஆட்சிதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது'' என அண்ணாமலை விமர்சித்துள்ளார்
இதையும் படிங்க: 'மத்திய அரசு'-க்கு மாறிய மு.க.ஸ்டாலின்… ஒன்றிய அரசு அழைப்பு வீராப்பு என்னாச்சு..?