பிரதமர் நரேந்திர மோடிக்கு கோடிக்கணக்கான ஆதரவாளர்களும், அபிமானிகளும் இருந்தாலும் அவர் ஹரியானாவிற்கு பயணம் செய்தபோது கைதாலைச் சேர்ந்த ராம்பால் காஷ்யப்பை சந்தித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ராம்பால் காஷ்யப் பிரதமர் மோடியின் முன் நின்றபோது, பிரதமர் மோடி, "ஏய்... தம்பி ஏன் இப்படிச் செய்தாய்? நீ ஏன் உன்னை கஷ்டப்படுத்திக் கொள்கிறாய்? என மனம் நெகிழ்ந்தார்.

கைத்தலைச் சேர்ந்த ராம்பால் காஷ்யப் 14 ஆண்டுகளுக்கு முன்பு மோடி பிரதமராகி அவரை நான் சந்திக்கும் வரை, நான் காலணிகள் அணிய மாட்டேன் என்று சபதம் எடுத்திருந்தார். பிரதமர் மோடி 2014-ல் பிரதமரானார். ஆனால் ராம்பால் காஷ்யப்பின் விருப்பமும் நிறைவேறியது. ஆனால் சந்திப்பு நடைபெறாமல் இருந்தது.
இதையும் படிங்க: திடீரென மோடியை புகழ்ந்து தள்ளிய பிரேமலதா விஜயகாந்த்.. பாஜகவுடன் தேமுதிக கூட்டணியா..?

இன்று, அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமர் மோடி தனது ஹரியானா சுற்றுப்பயணத்தில் யமுனாநகரை அடைந்தபோது, ராம்பால் காஷ்யப்பின் 14 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்தது. பிரதமர் மோடி ராம்பால் காஷ்யப்பை சந்தித்து, பின்னர் செருப்பு அணியாமல் இருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
ராம்பால் காஷ்யப் அணிந்து கொள்ள பிரதமர் ஒரு ஜோடி புதிய காலணிகளை பிரதமர் மோடி பரிசளித்தார். யமுனாநகர் வருகைக்குப் பிறகு, பிரதமர் மோடி ஒரு காணொளியைப் பகிர்ந்துகொண்டு அதில், 'இன்று ஹரியானாவின் யமுனாநகரில் உள்ள கைதாலைச் சேர்ந்த ராம்பால் காஷ்யப் ஜியைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. 'மோடி பிரதமராகி அவரைச் சந்திக்கும் வரை நான் காலணிகள் அணிய மாட்டேன்' என்று 14 ஆண்டுகளுக்கு முன்பு அவர் சபதம் எடுத்திருந்தார். இன்று அவரை ஷூ அணிய வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அத்தகைய அனைத்து நண்பர்களின் உணர்வுகளையும் நான் மதிக்கிறேன். ஆனால் அத்தகைய உறுதிமொழிகளை எடுப்பதற்குப் பதிலாக, அவர்கள் சில சமூக, தேசியப் பணிகளைச் செய்ய உறுதியளிக்க வேண்டும் என்று நான் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளரான ராம்பால் காஷ்யப், கைதல் மாவட்டத்தின் கேதி குலாம் அலி கிராமத்தில் வசிப்பவர். அவர் பாஜகவின் சக்தி கேந்திரத் தலைவர். இதற்கு முன்பு, அவர் அப்பகுதியின் பாஜக தலைவராகவும் இருந்துள்ளார். ராம்பால் காஷ்யப் கடந்த 14 ஆண்டுகளாக வெறுங்காலுடன் நடந்து வருகிறார். ராம்பால் காஷ்யப் ஒரு கூலி தொழிலாளி. அவரது மனைவியைத் தவிர, அவரது குடும்பத்தில் இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

ராம்பால் காஷ்யப்பிற்கு தற்போது 55 வயது. “நான் 18 வயதில் இந்த சபதத்தை எடுத்துக் கொண்டேன். அன்றிலிருந்து இன்றுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் நான் வாக்களித்தேன். எல்லோரும் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். பிரதமர் மோடியை சந்தித்தன் மூலம் எனது வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது மட்டுமல்லாமல், இது எனது வாழ்க்கைக்கு ஒரு பெரிய நாள்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புனிதமான அரசிலமைப்புச் சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்தும் காங்கிரஸ்.. பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!