பெங்களூருவில் வசித்து வந்த மருத்துவர் கே.எம்.செரியன் காலமானதை குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.
இதய அறுவை சிகிச்சையின் முன்னோடி, தொலைநோக்கு பார்வைகொண்டவர், புதிதுபுதிதாக கண்டுபிடிப்பவர், சிந்திப்பவர் என பெயரெடுக்கப்பட்ட மருத்துவர் செரியன் இழப்பு இந்திய மருத்துவத்துறைக்கு பேரிழப்பாகும்.

மருத்துவர் செரியன் என்பது சாதாரண பெயர் அல்ல, அந்த பெயர் ஒரு கற்பிக்கும் கூடம். மத்திய அரசால் பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்ட மருத்துவர் செரியன், இதய மருத்துவத்தில் மிகப்பெரிய ஜாம்பவான். கடந்த 1975ம் ஆண்டு நாட்டின் முதல் இதய நோயாளிகளுக்கான “பைபாஸ் சர்ஜரி” அறுவை சிகிச்சை, இதய மாற்று, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை ஆகியவற்றை முதன்முதலில் செய்தவர் மருத்துவர் செரியன் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர் செரியனின் அர்பணிப்பு, கருணை, மருத்துவத்தில் நிபுனத்துவம் ஆகியவற்றால் உலக இதயநோய், இதய அறுவை சிகிச்சையில் தவிர்க்க முடியாத மருத்துவராக மாறினார். மெட்ராஸ் மெடிக்கல் மிஷன், ஃபெரென்டயர் லைப்லைன் மருத்துவமனை, ஃபெரென்டயர் மெட்வில், இந்தியாவின் முதல் மருத்துவ சிறப்பு மருத்துவ பூங்கா, அறிவியல் பூங்கா ஆகியவற்றை மருத்துவர் செரியன் உருவாக்கினார்.
இதையும் படிங்க: 3-ம் வகுப்பு மாணவிக்கு திடீர் மாரடைப்பு: மயங்கி விழுந்து பரிதாப சாவு; 'ஒரே மகளை' இழந்த பெற்றோர் கதறல்; சோகத்தில் மூழ்கிய பள்ளி

பெங்களூவில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையின் இதயசிகிச்சை, அறுவை சிகிச்சைப் பிரிவு தலைவர் மருத்துவர் விவேக் ஜவாலி கூறுகையில் “ இதய அறுவை சிகிச்சையின் தந்தை, தனக்குத்தானே ஒரு மருத்துவ கல்விக்கூடத்தை நடத்தியவர், மருத்துவர் கே.எம். செரியன் விட்டுச் சென்ற இடத்தை மருத்துவத்தில் யாரும் நிரப்ப முடியாது.இந்திய இதய சிகிச்சை மருத்துவர்கள் செரியனை மிக உயர்ந்தஇடத்தில் வைத்துள்ளனர் “ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மொழிப்போர் தியாகிகளுக்கு உண்மையான மரியாதை செலுத்துகிறோமா? - மருத்துவர் ராமதாஸ் கேள்வி