புலிகள் இந்தியாவின் பெருமையின் ஒரு பகுதி.,இந்தியாவின் தேசிய சின்னமாக குறிக்கும் அளவிற்கு பெருமைக் கொண்டது. புலியானது ஒருகாலத்தில் கிழக்கு அனாத்தோலியப் பகுதியில் தொடங்கி அமுர் ஆற்றின் வடிப்பகுதி வரையிலும், தெற்கில் இமயமலை அடிவாத்தில் தொடங்கி சுந்தா தீவுகளில் உள்ள பாலி வரையிலும் பரவியிருந்தது. 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் புலிகள் தங்கள் வாழ்விடத்தில் ஏறத்தாழ 93% அளவு வரை இழக்க நேரிட்டது.

புலியானது பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் செம்பட்டியலில் அருகிய இனமாக குறிப்பிடப்பட்டுள்ளது. புலிகள் பண்டைய புராணங்கள் மற்றும் கலாச்சாரங்களின் நாட்டுப்புறக் கதைகளில் முக்கியமாக இடம்பெற்றன.
இதையும் படிங்க: ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிய பெண்; நூலிழையில் உயிர்தப்பிய வீடியோ
இந்தியா புலிகளைப் பாதுகாப்பதில் வெற்றி பெற்றிருந்தாலும், வேட்டையாடுதல் ஒரு முக்கியமான அச்சுறுத்தலாகவே உள்ளது. சில இடங்களில் புலிகளை வேட்டையாடும் சம்பவமும் அடிக்கடி நடக்கிறது. வனவிலங்குகளையும் அதன் வாழ்விடங்களையும் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் 100 புலிகள் கொலை செய்யப்பட்டது என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது.

இந்தியா முழுவதும் பஹேலியா மற்றும் பவேரியா கொள்ளை கும்பல் கடந்த 5 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட புலிகளைக் கொன்றுள்ளதாக வனத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது..
மஹாராஷ்டிரா வனத்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு வன விலங்குகள் வேட்டையாடுதல் மற்றும் கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்தியது. அதில், நாட்டில் உள்ள வேட்டை கும்பல்கள், குறிப்பாக பஹேலியா மற்றும் பவேரியா சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பற்றி அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்துள்ளது.

இந்த கும்பல், கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 100க்கும் மேற்பட்ட புலிகளின் மரணத்திற்குக் காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது. 2020ம் ஆண்டு முதல் ஜனவரி 2025ம் ஆண்டு வரை, மஹாராஷ்டிராவில் மட்டும் வேட்டையாடுதல் காரணமாக 41 புலிகள் மற்றும் 55 சிறுத்தைகள் இறந்துள்ளன.
இது தொடர்பாக 2024ம் ஆண்டில் மட்டும் ஏராளமான வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இருப்பினும், உறுதியான ஆதாரங்கள் இல்லாததால், கொல்லப்பட்ட புலிகளின் சரியான எண்ணிக்கையை தீர்மானிப்பது சவாலாக இருப்பதாக வன அதிகாரிகள் தெரிவித்தனர்.

புலிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புலிகளின் உடல் பாகங்களை சட்ட விரோதமாக வர்த்தகம் செய்வதில் இந்த நபர்கள் முக்கிய நபர்களாக இருந்து வந்துள்ளது வனத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 12 பேரை காவு வாங்கிய மர்ம நோய்! மகாராஷ்டிராவை அச்சுறுத்தும் ஜிபிஎஸ் …