உத்தர பிரதேசத்தில் உள்ள சந்த் சபீர் நகரின் கடார் ஜாட் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி பப்லு கடந்த 2017 ம் ஆண்டு கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், பப்லு வெளியூரில் வேலை செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் பப்லுவின் மனைவிக்கும் அதே ஊரைச் சேர்ந்த வேறு ஒருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சொந்த ஊர் திரும்பிய பப்லு இது குறித்து விசாரித்ததில், 18 மாதங்களாக , ராதிகா வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததை தெரிந்து கொண்டுள்ளார். இதனை பிரச்சனை ஆக்காத பப்லு, யாரும் எதிர்பார்க்காதவாறு, தன் மனைவியை அவருடைய காதலனுக்கு திருமணம் செய்து வைத்தார். மேலும், குழந்தைகளை தானே வளர்ப்பதாகவும் காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவர்களை கொலை செய்யும் சம்பவங்களால் இந்த முடிவை எடுத்ததாகவும் பப்லு கூறி இருந்தார்.
இதையும் படிங்க: ஆண் நண்பருடன் மனைவியின் ஆபாச சாட்டிங்.. எந்த கணவராலும் பொறுத்துக் கொள்ள முடியாது.. உயர் நீதிமன்றம் அதிரடி..!

தொடர்ந்து ராதிகா, காதலன் விகாஸ் என்பவரது வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில், ராதிகாவின் புதிய மாமியாருக்கு, தனது மருமகள் இரண்டு குழந்தைகளை விட்டுப் பிரிந்து வந்தது பிடிக்கவில்லை என தெரிகிறது.எனவே, குழந்தைகள் தாயார் இல்லாமல் வாழ்வது கடினம், அப்படி ஒரு சூழ்நிலை குழந்தைகளுக்கு வேண்டாம் என்றும் மீண்டும் உன் பழைய கணவன் பப்லுடன் சென்று சேர்ந்து வாழ்ந்து கொள் என்றும் விகாஸின் தாயார் அறிவுரை கூறியதாக கூறப்படுகிறது.

அவரது அறிவுரையை ஏற்றுக் கொண்ட ராதிகா மனம் திருந்தி தன் பழைய கணவனை தேடிச் சென்றபோது, பப்லுவும் ராதிகாவை மீண்டும் ஏற்றுக் கொண்டுள்ளார்.இது பற்றி பேசிய பப்லு, ராதிகாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது உண்மை தான். ஆனால், அவர் அப்பாவி. மனம் மாறி மீண்டும் வந்துவிட்டார். அதனால், அனைத்துக்கும் நான் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன். இனிமேல் நாங்கள் குடும்பமாக வாழ்வோம் என கூறியுள்ளார்.
மனைவியை காதலுனுக்கே திருமணம் செய்து வைத்து, மீண்டும் மனம் மாறி வந்த அவரை, பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்ட கணவனின் செயல் என்னா மனுஷன்யா என நினைக்க வைக்க தான் தோன்றுகிறது…
இதையும் படிங்க: வாட்ஸ் அப்பில் முத்த "எமோஜி" அனுப்பிய வாலிபர்..! இரண்டு பேரையும் போட்டு தள்ளிய கணவர்.. தற்போது சிறையில்..!