மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தை சேர்ந்த 35 வார கர்ப்பிணி பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு வழக்கமான பிரசவ கால பரிசோதனை செய்து கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, அந்த பெண்ணின் கருவை "சோனோகிராபி" பரிசோதனை செய்தபோது, அவருக்கு "கருவுக்குள் கரு" என்ற அரிய வகை பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டது. பெண்ணின் கர்ப்பப்பைக்குள் குழந்தை கருவுற்றபோது, தவறுதலாக சிதைவுற்ற கரு ஒன்று அந்த குழந்தையின் வயிற்றுக்குள் சென்று தங்கி இருக்கிறது. இது பிற்காலத்தில் அந்த குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது. 5 லட்சம் பேரில் ஒருவருக்கு இதுகுறித்து மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் பிரசாத் அகர்வால், "கருவுக்குள் கரு என்பது மிகவும் அரிதான நிகழ்வாகும். 5 லட்சத்தில் ஒருவருக்கே இதுபோன்ற பிரச்சினை ஏற்படும். இதுவரை உலகம் முழுவதும் சுமார் 200 பேர் இதுபோன்ற பிரச்சினையை எதிர் கொண்டுள்ளனர். இந்தியாவில் 10 முதல் 15 பேருக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டு உள்ளது" என்றார்.

அவர் மேலும் கூறுகையில், " இந்த சோதனையின் போது அசாதாரணமான ஒன்றை நான் கவனித்தேன். சாதாரணமாக வளரும் கரு 35 வாரங்கள் ஆனால் அதன் அடிவயிற்றில் எலும்புகள் அடங்கிய கூடுதல் அமைப்பு உள்ளது. இந்த உட்கரு கிரிப்டோடி டிமஸ் என்று குறிப்பிடப்படுகிறது. இது மிகவும் அபூர்வமான ஒரு பிறவி கோளாறு" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சைஃப் அலிகான் தாக்கப்பட்ட பின்னணியில் நிழல் உலக தாதா கும்பல்..? மகாராஷ்டிரா அமைச்சர் சொன்ன உண்மை..!

மேலும், 'தற்போது சம்பந்தப்பட்ட கர்ப்பிணியின் 35 வார கருவின் வயிற்றில் கரு போன்ற அமைப்பு இருப்பதையும், அதற்கு கை, கால்கள் போன்ற அசாதாரண அமைப்பு இருப்பதையும் கண்டறிய முடிந்துள்ளது. எனவே, பாதுகாப்பான பிரசவ நடைமுறைகளுக்காக அண்டை மாவட்டமான சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள மருத்துவமனைக்கு அந்த கர்ப்பிணி பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்"என்றும் அவர் தெரிவித்தார். "இதில் உள்ள சிக்கல்களை தவிர்க்க, "ஒட்டுண்ணி இரட்டை கரு'வை அறுவை சிகிச்சை மூலமும் அவற்றலாம் . அறுவை சிகிச்சைக்குப் பிறகு இது போன்ற நிகழ்வுகளில் வெற்றிகரமான முடிவுகள் ஏற்கனவே பதிவாகி இருப்பதால் தாய் மற்றும் கருவின் நலனை உறுதி செய்வதற்காக மருத்துவர்கள் கர்ப்பத்தை தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்" என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: 3 நாட்களில், தலை வழுக்கையாகும் "டக்ளா வைரஸ்"பரவுகிறது : மகாராஷ்டிரா மாநிலத்தில் பீதி