தமிழக மக்களின் முக்கிய பிரச்சனைகளை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மென்மையாக கையாளுகிறார். மேலும் மக்களை சந்திப்பதை எவ்வளவு காலம் தள்ளி போட போகிறார் என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார். குமாரபாளையம் தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், த.வெ.க.வில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கிறது, அணுகுமுறை இருக்கிறது. த.வெ.க. ஆனது நடிகர் விஜய்க்கான கட்சி.
விஜய்க்காக மட்டுமே அனைவரும் அவர் பின்னாடி வருகின்றனர் ஆதரவாளர்கள் வாக்காளர்கள் முதல் தலைமுறை வாக்காளர்கள் என அனைவரும் விஜய்க்காக மட்டுமே வருகின்றனர். தமிழகத்தில் மக்களுக்கான முக்கிய பிரச்சினைகளை நடிகர் விஜய் மென்மையாக கையாளுகிறார். அனைத்து பிரச்சினைகளுக்கும் அறிக்கை மட்டுமே கொடுக்கிறார் என குற்றம் சாட்டினார்.

நடிகர் விஜய் மக்களை சந்திப்பதை எவ்வளவு நாட்கள் தள்ளிப் போடப் போகிறார் என்பது தெரியவில்லை என்ற கேள்வி எழுப்பிய அவர், தமிழகத்தில் மற்ற கட்சிகள் அனைவரும் தேர்தல் பணிகளை துவங்கிய நிலையில் நடிகர் விஜய் இன்றளவும் வெளியில் கூட வராதது ஒரு விஜய் ரசிகையாக எனக்கும் ஏமாற்றம் அளிக்கிறது என கூறினார். வக்ஃபு விஷயத்தில் சிறுபான்மையினர் ஆதரவு அதிகரித்துள்ளது. இஸ்லாமிய சமுதாயத்தினர் இதனை மிகப்பெரிய அளவில் வரவேற்கின்றனர் என்றார்.
இதையும் படிங்க: விஜயைவிட பெரிய ஆளாகத் துடிக்கும் அல்லக்கைகள்… சல்லி சல்லியாய் நொறுக்கிய நடிகை கஸ்தூரி..!

வக்ஃபு விஷயத்தில் இந்துக்களுக்கு என்ன வேலை என்ற கேள்வி எளிமையானால் இந்து சமய அறநிலையத்துறையில், இந்து பண்டிகைகளுக்கு நாங்கள் ஏன் வாழ்த்து சொல்ல வேண்டும் என்ற நாத்திகக் கொள்கை உடையவர்கள் தான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதனால் இந்து கோயில்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுப்பினார்.
இதையும் படிங்க: விஜய்க்கு என்னைப்போல ஒரு அடையாளம் இருக்கிறதா..? அவர் ஒரு 'ஜீரோ'..! ஆ.ராசா ஆவேசம்..!