முன்னாள் மூக்கழகி, எந்நாளும் இந்திய திரையுலகின் பேரழகி ஸ்ரீதேவி. ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரே உலுக்காக உலுக்கிவிட்டது ஸ்ரீதேவியின் மறைவு. தமிழ்சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டிவிட்டு பாலிவுட் போன ஸ்ரீதேவியை அங்கும் கொண்டாடியது மக்கள் மனசு. இருந்தாலும், தனது ஆஸ்தான கோடம்பாக்கத்தை விட்டு விலகாமல் தொடர்பு கொண்டிருந்தார் அவர். ரஜினி, கமல், விஜயகுமார், அஜித் பேமிலியுடனும் ஸ்ரீதேவியின் நட்பு தொடர்ந்தது.
ஸ்ரீதேவி மீது இன்றும் பைத்தியமாக இருக்கும் ரசிகர்கள் உண்டு. இப்போது அவர் நம்முடன் இல்லை என்றாலும் ரசிகர்களுக்கு பஞ்சமில்லை. இன்றும் அவரது படங்களை ரசிகர்கள் அதே ஆர்வத்துடன் பார்க்கிறார்கள்… ரசிக்கிறார்கள். இப்போதே இப்படியென்றால் அவரைப் பார்க்க மக்கள் கூட்டம் கட்டுப்பாடில்லாமல் போன ஒரு காலமும் இருந்தது. ஸ்ரீதேவிக்கு சாமானியர்கள் மட்டுமல்ல, பெரிய நட்சத்திரங்களும், நீதிபதிகளும் கூட ரசிகர்களாக இருந்தனர். அதனால்தான், அவரைப் பார்க்க, நீதிபதியே அவருக்கு சம்மன் அனுப்பி, அவரை நீதிமன்றத்திற்கு வருமாறு உத்தரவிட்ட சம்பவமும் இப்போது வெளி வந்துள்ளது.

சீனியர் வழக்கறிஞர் மஜீத் மேனன் பல பிரபலங்களின் வழக்குகளில் ஆஜராகியுள்ளார். அவர் தனது 50 வருட நீதிமன்ற பயணத்தை சுயசரிதையாக எழுதியுள்ளார். அதில் பிரபலங்கள் தொடர்பான பல சம்பவங்களையும் கூறியுள்ளார்.குல்ஷன் குமார் கொலை வழக்கு,மும்பை குண்டுவெடிப்பு வழக்குகளில் சஞ்சய் தத் சார்பாகவும் அவர் வாதாடியுள்ளார்.பாலிவுட்டிற்கும், பாதாள உலகத்திற்கும் உள்ள தொடர்பையும் தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மயிலு பெத்த மகளா இது? ஹாலிவுட் ஹீரோயின் போல் மின்னும் ஜான்வி கபூர்!

சமீபத்தில், மஜீத் மேனன் தனது நேர்காணல் ஒன்றில், ''இந்த புத்தகத்தில் பல கதைகளை சேர்த்துள்ளேன்.ஆனால் நான் எழுதாத கதை ஒன்றும் இருக்கிறது. அந்த கதை மறைந்த நடிகை ஸ்ரீதேவியுடன் தொடர்புடையது. இந்த வழக்கு தொடர்பான அதிக விவரங்களை என்னால் பகிர்ந்து கொள்ளமுடியாது.ஸ்ரீதேவியைப் பார்க்க நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதியே உத்தரவிட்டார்.
ஒருமுறை நான் ஸ்ரீதேவி வழக்கை வாதாடினேன். அந்த நேரத்தில் அவர் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். மக்கள் அவரைப் பார்க்க வெறித்தனமாக இருந்தனர். "நீதிபதி கூட அவரைப் பார்க்க பைத்தியமாக இருந்தார்.இந்த வழக்கில் விலக்கு கோரி விண்ணப்பித்தபோது, அதற்கு நான் மறுத்துவிட்டேன். 
நீதிபதி சம்மன் அனுப்பி, இந்த வழக்கில் உங்கள் கட்சிக்காரர் ஸ்ரீதேவி நேரில் ஆஜராக வேண்டும் என்றார். ஏனென்றால் அவரது நோக்கம் ஸ்ரீதேவியை நேரில் பார்க்க வேண்டும் என்கிற ஆசை. இறுதியாக ஸ்ரீதேவி நீதிமன்றத்திற்கு வந்தபோது கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. அப்போது கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது கடினமாகிவிட்டது'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆண் நண்பருடன் படுக்கையறையில் ஜாலி… தந்தையிடம் கையும் களவுமாக பிடிபட்ட ஜான்விகபூர்..!