குழந்தையாக இருக்கும் ஜெயலலிதாவை, அவரது அண்ணன் ஜெயராமன் வண்டி ஒன்றில் அமர வைத்திருப்பது போன்ற புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இத்தருணத்தில் தனது குழந்தை பருவம் குறித்து ஜெயலலிதாவே என்ன சொல்லியிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

என்னுடைய வாழ்க்கையில் இனிமையான பருவம் என்றால் அது குழந்தை பருவம் தான் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே தனது பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். ஏனென்றால் அந்த பருவத்தில் தான் தான் பொறுப்புகளும், கவலைகளும் இல்லாமல் இருந்தேன் எனக்கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அம்மா உயிரோடு இருந்தா எதிர்ல நிக்க முடியுமா ஒ.பி.ஆர்? உட்கார்ந்தே கும்பிடுவது சரியா? இபிஎஸ் ஆதரவாளர்கள் குமுறல்
ஜெயலலிதாவிற்கு 2 வயது இருக்கும் போதே அவருடைய தந்தை இறந்துவிட்டார். அவருக்கு 4 வயது இருக்கும் போது சென்னை சென்ற அவருடைய தாயார் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அப்போது எனது தாயுடன் சென்னைக்கு வந்தோம். அப்போது அவர் சினிமாவில் பிசியாக இருந்த காலக்கட்டம் என்பதால், அவரால் எங்களைக் கவனித்துக் கொள்ள முடியவில்லை.

இதனால் ஜெயலலிதாவை, அவருடைய அண்ணன் ஜெயராமனும் பெங்களூருவில் இருந்த அவருடைய அம்மா, அப்பா (தாத்தா, பாட்டி) வீட்டிற்கு அனுப்பிவைத்தார். அங்கு தான் இருவரும் வளர்ந்தார்கள். ஜெயலலிதாவின் தாத்தா, பாட்டி மிகவும் கண்டிப்பானவர்கள். அவர்களின் கண்காணிப்பிலும், கண்டிப்பிலும் தான் ஜெயலலிதா வளர்ந்தார். பள்ளி காலத்திலேயே பயங்கர ஸ்ட்ரிக்ட்டாக தான் வளர்த்திருக்கிறார்கள். காலையில் 5 மணிக்கு எழுந்துவிட வேண்டும். பாட்டு வாத்தியார் வீட்டிற்கே வந்து பாட்டு சொல்லிக் கொடுப்பார்.

அதன் பின்னர் 4:30 மணி வரை பள்ளிக்கூடம். வீட்டிற்கு வந்ததும் 2 ஆசிரியர்கள் வந்து நடனம் சொல்லிக் கொடுப்பார்கள். முதலில் ஒரு மணி நேரம் பரத நாட்டியம் கற்றுக்கொடுப்பார்கள். அதன்பின்னர் மற்றொரு ஆசிரியர் வந்து குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனத்தைச் சொல்லிக்கொடுப்பார்.

அதன்பின்னர் பள்ளியில் கொடுத்த வீட்டுப்பாடங்களை எல்லாம் ஒழுங்காக முடித்துவிட்டு, தூங்க சென்றுவிட வேண்டும். இதுதான் ஜெயலலிதா அம்மையாரின் குழந்தைப் பருவ தினசரி வழக்கமாக இருந்துள்ளது. 16 வயது வரை தனது வாழ்க்கை இப்படித்தான் சென்றதாக ஜெயலலிதாவே பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார். எக்காரணம் கொண்டும் அதை மறுக்கவோ, செய்ய முடியாது என எதிர்த்து பேசவோ எனக்கு அனுமதி கிடையாது, அப்படியொரு கட்டுக்கோப்பான முறையில் தான் வளர்க்கப்பட்டேன் எனக்கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ரஜினிகாந்த் சொன்ன ஜெயலலிதாவுடனான அந்த 3 சந்திப்புகள் என்னென்ன?... பில்லா ஹீரோயின் ஜெயலலிதாவா?