வெள்ள நிவாரண நிதி தரவில்லை மத்திய அரசு மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தரமான பதிலடி கொடுத்துள்ளார். குறிப்பாக திமுக உடன் பிறப்புகளை விமர்சிக்கும் வகையில் மறைமுகமாக அவர் செய்துள்ள காரியம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அரசு முறை பயணமாக திருநெல்வேலிக்கு 2 நாட்கள் பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “36 ஆயிரத்து 97 கோடி ரூபாய் மழை வெள்ள பாதிப்பிற்கு கேட்டபோது வெறும் 26 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது இப்படித்தான் மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நடந்த பட்ஜெட்டில் ஆவது ஏதாவது ஒதுக்கி இருக்க வேண்டும் அதுவும் கிடையாது. தமிழகத்திற்கு நிதியும் கிடையாது நீதியும் கிடையாது என ஒதுக்கி விட்டார்கள் என்றார். மேலும் தமிழகத்திற்கு என்று சிறப்பு திட்டங்கள் அறிவிக்க வேண்டாமா? இப்படி நாம் கேட்கும் கேள்விகளுக்கு எதுவுமே பதில் வராது, திருநெல்வேலி அல்வா என்றால் உலகத்திலேயே ஃபேமஸ், ஒன்றிய அரசு கொடுக்கும் அல்வா தான் அதைவிட ஃபேமஸ் ஆக உள்ளது என மத்திய அரசை விமர்சித்தார்.
இதையும் படிங்க: நெல்லையில் 'அல்வா' கொடுக்க அடிபோட்ட மு.க.ஸ்டாலின்… பாஜக நிர்வாகியை தட்டித்தூக்க ஸ்கெட்ச்..!

இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தேர்தலின் போது திமுக அரசு கொடுத்த சில வாக்குறுதிகளை பட்டியலிட்டு, அவற்றை எல்லாம் திமுக மக்களுக்கு கொடுத்த அல்வா என விமர்சித்துள்ளார். கல்விக் கடன் தள்ளுபடி, பயிர்க்கடன் தள்ளுபடி, 5 சவரன் வரையிலான நகைக்கடன் முழுமையாக தள்ளுபடி, சிலிண்டர் ரூ.100 மானியம், டீசல் விலை ரூ. 4. குறைப்பு, மாதம் ஒருமுறை மின்கட்டணம், 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக்குவோம், நெல்லுக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2500, கரும்பு ஆதரவு விலை டன்னுக்கு ரூ.4000, இந்து கோவில்களை புனரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு, அரசு துறைகளில் புதிதாக 2.00.000 பணியிடங்கள், காலியாக உள்ள 3,50,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும், பழைய ஓய்வூதிய திட்டம் என அல்வாக்கள் பட்டியல் என முழு நீள பட்டியல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த அல்வா கடைக்கு, “மு.க.ஸ்டாலின் அல்வா கடை” என பெயரிட்டுள்ள அண்ணாமலை, அண்ணா அறிவாலயத்தின் முழு முகவரியையும் குறிப்பிட்டு, எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு எல்லாம் மேலாக விலை ரூ.200 என குறிப்பிடப்பட்டுள்ளது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஏனெனில் திமுக உடன் பிறப்புகள் தங்களுக்கு வழக்கப்படும் 200 ரூபாய்க்காக யாரை வேண்டுமானாலும் விமர்சிப்பார்கள், சோசியல் மீடியாவில் அவதூறு பரப்புவார்கள், பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்றெல்லாம் பிற கட்சியினர் விமர்சிப்பது உண்டு. இதனால் சோசியல் மீடியாக்களில் திமுகவினரை 200 ரூபாய் உ.பி.க்கள் என விமர்சிப்பது வழக்கமானது. அதனை மனதில் கொண்டு தான் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அதனை பயன்படுத்தியுள்ளார் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழக அரசின் மசோதாவை ஏற்றுக்கொள்ள அவசியம் இல்லை.. கவர்னர் பதில்; உச்ச நீதிமன்றத்தில் இன்று 3-ம் நாள் விசாரணை