மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது என்பதால், இது பாஜகவின் தூண்டுதலாக இருக்கும் என்று ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்தனர். சமீபத்தில் டெல்லியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 30 ஆண்டுகளுக்குப்பின் பாஜக ஆட்சியைப் பிடித்தது, ஆம் ஆத்மி கட்சி 3வதுமுறையாக ஆட்சியில் அமரும்வாய்ப்பை இழந்தது. காங்கிரஸ் கட்சி வாக்குகளைப்பிரித்ததால் ஆம்ஆத்மி கட்சி தோற்கும்நிலை ஏற்பட்டது. ஆம் ஆத்மி கட்சியின் கட்டமைப்பிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது, பதவிப்போட்டி ஏற்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சி விமர்சி்த்துள்ளது. இந்நிலையில் போபால் நகரில் ஆம் ஆத்மி கட்சி ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து அலுவலகத்தை இயக்கி வந்தது.

ஆனால், கடந்த 3 மாதங்களாக அந்தக் கட்டிடத்துக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் வாடகை தரவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கட்டிய உரிமையாளர் ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்தை இழுத்துப்பூட்டி பூட்டுப் போட்டுச் சென்றுவிட்டார். ஆம் ஆத்மி இணைச் செயலர் ராம்காந்த் படேல் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ நாங்களும் எங்கள் கட்சியும் நேர்மையாக மக்களுக்காக உழைத்ததால் இந்த நிலை ஏற்பட்டது. நேர்மையின் பரிசாகப் பார்க்கிறோம். விரைவில் நிலைமை மாறும், நாங்கள் நேர்மையானவர்கள், இப்போது எங்கள் கட்சியிடம் நிதி இல்லை, வாடகையும் தரமுடியவில்லை.
இதையும் படிங்க: ஆம் ஆத்மி கட்சிக்குள் புகைச்சலா?.. மாற்றப்படுகிறாரா பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்.. அரவிந்த கெஜ்ரிவால் எடுக்கப் போகும் முடிவு என்ன?

உள்ளூர் தலைவர்கள் மூலம் கிடைக்கும் நிதியின் மூலம் கட்சியை நடத்த தலைமையிடம் தெரிவித்துள்ளது, ஆனால், தொண்டர்களிடம் நிதி வசூலிக்கும் நிலையில் அவர்களும் இல்லை. அலுவலகக் கட்டிதத்துக்கு எவ்வளவு வாடகை எனத் தெரியாது, ஆனால் 3 மாதங்களாக வாடகை கொடுக்கவில்லை என என்னிடம் தெரிவித்தனர்” எனத் தெரிவித்தார். பாஜக செய்தித்தொடர்பாளர் நரேந்திர சலுஜா எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ ஆம்ஆத்மி கட்சியின் அலுவலகத்துக்கு பூட்டுபோடப்பட்டது, அடுத்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளார்
இதையும் படிங்க: தேசத்திற்கான பின்னடைவு..! இந்தியா கூட்டணியே விழித்துக் கொள்..! அலறும் திருமா