அந்த தியாகி யார் என்ற வாசகத்துடன் சட்டையில் பேக் அணிந்து இன்றைக்கு சட்டப்பேரவைக்கு அதிமுக எம்எல்ஏக்கள் சென்றிருந்தனர். அதாவது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜி செந்தில் பாலாஜி சிறைச் சென்று வந்ததற்குப் பிறகு முதலமைச்சர் அவரை தியாகி என்று குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவித்திருந்தார். அதன் பின்னர் பதிவிட்ட பலரும், அவரை பலரும் தியாகி என குறிப்பிட ஆரம்பித்தனர்.

தற்போது டாஸ்மாக்கில் 1000 கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அமைச்சரான செந்தில் பாலாஜியை பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ரவுண்ட் கட்டி வருகின்றனர். குறிப்பாக அதிமுக சார்பில் இதற்கு முன்னதாக 1000 ரூபாய் மாத மாதம் பெண்களுக்கு கொடுப்பது போல் கொடுத்து 1000 ரூபாய் கோடியையும் அமுக்குகின்ற செயலையை செய்து கொண்டிருக்கிறது இந்த அரசாங்கம் என்றெல்லாம் போஸ்டர்கள் எல்லாம் ஒட்டப்பட்டது.
இதையும் படிங்க: கலைச்சிவிட்டியே கார்த்தி சிதம்பரம்.. அதிமுகவை அப்புல தூக்கி டப்புன்னு கீழ போட்ட காங்கிரஸ் எம்.பி..!

இதனிடையே சட்டபேரவையில் டாஸ்மாக் வழக்கு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச முயன்ற நிலையில், அதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி வழங்காததால் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இசக்கி சுப்பையா உள்ளிட்ட 13 உறுப்பினர்கள் பதாகைகளை தூக்கிக் காட்டினர். இதனையடுத்து அவர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். மேலும், அவர்களுக்கு ஆதரவாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

அதிமுகவினர் வெளிநடப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பதிலடி கொடுத்தார். அப்போது பேசிய அவர், “இங்கு எதிர்கட்சியை சார்ந்த குறிப்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்கட்சி தலைவர்களை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு பிரச்சனையை கிளப்பி, அதற்கு பிறகு விவாதங்கள் நடைபெற்றது. அதற்கு அவை முன்னவர் அளித்த விளக்கத்தை ஏற்காமல் அதிமுகவினர் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். அதிமுகவினர் ஒரு பதாகையை கையில் பிடித்துக்கொண்டு வந்தார்கள், அதில் யார் அந்த தியாகி? என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

மறைந்த எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட அதிமுகவை, அதற்கு பிறகு பொறுப்பேற்ற இப்பொழுது எதிர்கட்சியாக எதிர்கட்சி தலைவராக இருக்கக்கூடியவர்கள் தாங்கள் செக்கி இருக்கிறார்கள். பல்வேறு வழக்குகளிலிருந்து பல்வேறு பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக யாருடைய காலையில போய் விழுந்தார்களோ?. ஆக இன்றைக்கு அப்படி விழுந்த நேரத்திலே நொந்து போய் நூடுல்ஸாக மாறி இருக்கக்கூடிய அதிமுக தொண்டர்கள் தான் இன்றைக்கு தியாகிகளாக இருக்கிறார்கள்.

முதலமைச்சர் பதவிக்காக யாருடைய காலில் எல்லாமோ விழுந்து, கடைசியாக அந்த அம்மையாரையே ஏமாற்றிவிட்டுச் சென்றாரே அவர் தான் தியாகி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சகட்டுமேனிக்கு விமர்சித்தார். இதனிடையே, சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமலியில் ஈடுபட்டதன் காரணமாக இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு பயம்... எகிறியடிக்கும் புகழேந்தி... பறந்தது வக்கீல் நோட்டீஸ்!