திண்டுக்கல் மாவட்டத்தில் மீண்டும் மிரட்டிய வெடி சத்தம், இரண்டு முறை ஏற்பட்ட அதிர்வால் அரசு பள்ளியின் மேல் கூரை பெயர்ந்து விழுந்ததால் அதிர்ச்சி நிலவுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே அவ்வப்போது நில அதிர்வுடன் கூடிய பயங்கர வெடி சத்தம் கேட்டு வருகிறது. வெடி சத்தமும், நில அதிர்வும் மாவட்டம் முழுவதுமே உணரப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இதுகுறித்து பலமுறை ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையிலும் மாவட்ட நிர்வாகம் சார்பாக இதுவரை வெடிச்சத்தம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: 'பொன்' முட்டையிடா வாத்து… பென் கொடுத்த ரிப்போர்ட்... மஸ்தானுக்கு மீண்டும் மா.செ பதவியின் பின்னணி..!
இந்நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர், வடமதுரை, எரியோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 20 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு முறை பயங்கர வெளிச்சமும், நில அதிர்வும் ஏற்பட்டது. வீடுகளில் உள்ள கண்ணாடி ஜன்னல்கள் அதிர்ந்ததால், பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில் வேடசந்தூர் அருகே உள்ள நாகையகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள 8-ம் வகுப்பு அறையின் சிமெண்ட் மேற் கூரை பெயர்ந்து விழுந்தது. மேலும் மேற்கூரையில் விரிசலும் ஏற்பட்டது.
அப்போது பள்ளியில் இடைவேளை நேரம் என்பதால் மாணவர்கள் அனைவரும் வகுப்பறையை விட்டு வெளியே சென்றிருந்தனர்.இதனால் நல் வாய்ப்பாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக தொடர் வெடிச்சத்தம் கேட்டு வந்த நிலையில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருந்து வந்தது. தற்போது பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கத்தார் மன்னரை வரவேற்க, பிரதமர் மோடி டெல்லி விமான நிலையத்திற்கு நேரில் சென்றது ஏன்? ..இதுதான் காரணம்..!