பிறக்கும் போது பழனிசாமியாக பிறந்த நடிகர் சிவகுமார் 1965 முதல் 2005 வரை கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலம் சினிமாவில் பல சாதனைகளை படைத்திருக்கிறார். காக்கும் கரங்கள் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். சினிமாவில் கால் பதித்த பிறகு பழனிசாமி என்ற பெயர் சிவகுமார் என்று மாற்றி கொண்டார். பின்னர் சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருமாள் பெருமை, உயர்ந்த மனிதன், அன்னக்கிளி, ரோசாப்பூ ரவிக்கைகாரி, சிந்து பைரவி என்று மாஸான படங்களில் நடித்துள்ளார்.
எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், சரத் குமார், பிரபு, கார்த்திக், மோகன், அர்ஜூன், விஜய், அஜித் குமார், விக்ரம், சூர்யா என்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

சிவகுமார் நடித்த படங்களில் நெருப்பிலே பூத்த மலர், கவுசி, இயக்கிய, ஆகிய படத்தில் சிவகுமாருகு ஜோடியாக பூர்ணிமா ஜெயராம் நடித்திருந்தார். சிவகுமாரும், பூர்ணிமாவும் காதலிக்கிறார்கள். அவர்களது காதலை ஏற்க மறுக்கு சிவகுமாரின் அப்பா அவரை பாதிரியாராக மாற்றுகிறார். இதையடுத்து பூர்ணியாக வேலை பார்க்கும் பள்ளிக்கு சிவகுமார் பாதிரியாராக வருகிறார். அதன் பிறகு நடக்கும் கதை தான் நெருப்பிலே பூத்த மலர். இந்தப் படத்தின் இறுதியில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிவகுமாரை அடித்து ஊரை விட்டு துரத்துவார்கள்.
இதையும் படிங்க: தோழிகளுடன் வெளிநாட்டில் வைப் பண்ணும் மாளவிகா மோகனன்!

படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு சிவகுமார் படத்தை நண்பர்களுக்கு சிறப்பு காட்சியாக போட்டு காட்டியிருக்கிறார். இந்த ஷோவிற்கு சிவகுமாரின் மகன்களான சூர்யா (8) மற்றும் கார்த்தி (6) இருவரும் வந்துள்ளனர். படத்தை முழுவதும் பார்த்த கார்த்தி கிளைமேக்ஸில் அப்பா அடிவாங்குவதை பார்த்து கதறி அழுதுள்ளனர். அதோடு அப்பாவை அடிக்காதீங்க, ஏன் அப்பாவை அடிக்கிறீங்க என்று கத்தி கூச்சல் போட்டு அங்கு ஒரு ரணகளமே செய்து விட்டாராம். படம் முடிந்த பிறகும் கார்த்தி தேம்பி தேம்பி அழுதுள்ளார். அவரை சமாதானப்படுத்த அவருக்கு ஐஸ்க்ரீம் வாங்கி கொடுத்து அழுகையை நிறுத்த முயற்சி செய்துள்ளனர்.
ஆனால், அவர் அழுகையை மட்டும் நிறுத்தவில்லையாம். வீட்டிற்கு அழைத்து சென்ற பிறகு தான் சினிமா பற்றி மகன்களுக்கு புரிய வைத்திருக்கிறார் சிவக்குமார்.
இதையும் படிங்க: அல்ட்ரா மாடர்ன் உடையில் ஹாலிவுட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அதிதி ஷங்கர்!