நேற்று மாலை நாடாளுமன்ற அலுவலகத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள பெரும் ஊழல் குறித்து அமலாக்கத்துறை அறிவித்துள்ள அறிக்கையின்படி சட்டநடவடிக்கையை விரைவு படுத்த வேண்டுமென முன்னாள் எம்.பி.,யும், பாஜக மாநிலத் துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் கே.பி.ராமலிங்கம் கேட்டொக் கொண்டார்.
அவர், நிர்மலா சீதாராமனிடம், ''மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின்பு இந்த மூன்று ஆண்டு காலத்தில் அவர் நிறைவேற்றி இருக்கக்கூடிய, நாட்டு மக்களுக்கு செய்திருக்கிற சேவையை விட செய்திருக்கிற ஊழல் அதிகம். அந்த வகையில் இன்றைக்கு நாட்டிலேயே அவரது ஆட்சி சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் மறைப்பதற்காக தான் இது மத்திய அரசுக்கு எதிராக இவர்கள் பெரிய போர் தொடுப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

முதலில் மும்மொழிக் கல்விக் கொள்கையை கையில் எடுத்தார்கள். அதற்கு அடுத்து தொகுதி வரையறையை கையில் எடுத்தார்கள். மத்திய அரசிலிருந்து எந்த ஆணையும் பிறப்பிப்பதற்கு முன்பே அதற்காக ஒரு கூட்டம், அனைத்து கட்சி கூட்டம், தென்னிந்தியாவில் இருக்கக்கூடிய பல அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்து கூட்டம் என்று அம்மாஞ்சி நாடகங்களை முதலமைச்சர் அரங்கேற்றுக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: ஏளனம் என்று வார்த்தையை விட்ட நிர்மலா சீதாராமன்.. எள்ளி நகையாடுவதா என்று கொந்தளிக்கும் கனிமொழி.!!

ஒரிஜினலாக ஆலைகளில் தயாரிக்கப்படுகிற மது இன்றைக்கு 130, 150, 160 ரூபாய் என்று விற்கக் கூடிய சூழ்நிலையில் அவ்வளவு கொள்ளை பணமாக திமுக அரசு சேர்த்திருக்கிறது. இதுவரை அமலகத்துறையால் ரூ.1000 ஆயிரம் கோடி தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையிலேயே ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலே இதில் ஊழல் நடத்தி இருக்கிறது என்பதுதான் உண்மை'' என அவர் நிர்மலா சீதாரமனிடம் தெரிவித்து, இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: ஊழலை மறைக்க தொகுதி மறுவரையறையைப் பூதாகரமாக்கும் திமுக... மு.க.ஸ்டாலினை விளாசி தள்ளிய நிர்மலா சீதாராமன்.!!