"பாகிஸ்தானியர்கள் மகாராஷ்டிராவில் இருந்து வெளியேறாவிட்டால் சுட்டுக் கொல்லப்படுவார்கள்" என மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பரபரப்பை கிளப்பியுள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்த 107 பேர் மகாராஷ்டிராவில் இருப்பது குறித்து ஏக்நாத் ஷிண்டே கருத்து தெரிவித்த அவர், ''பாகிஸ்தானியர்கள் எந்த பொந்துக்குள் ஒளிந்திருந்தாலும், காவல் துறை அவர்களை கண்டுபிடித்து அங்கேயே கொல்லும்.

பாகிஸ்தான் நாட்டினர் விரைவில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமித் ஷாவும், பிரதமர் மோடியும் எச்சரித்துள்ளனர். மகாராஷ்டிராவில் சுமார் 107 பாகிஸ்தானியர்கள் காணவில்லை. அவர்கள் இப்போதே நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இல்லையென்றால், போலீசார் உங்களை கண்டுபிடித்து சுட்டுக் கொல்லும். பாகிஸ்தானியர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்..! 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணையும் உத்தவ் தாக்கரே-ராஜ் தாக்கரே..!

மஹாராஷ்டிராவில் 107 பாகிஸ்தானியர்கள் காணாமல் போயுள்ளதாக ஷிண்டே கூறிய நிலையில், அவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் ஃபட்னாவிஸ் கூறினார். பாகிஸ்தான் விசா ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவில் பாகிஸ்தானியர்கள் இருப்பது குறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் முரண்பட்ட அறிக்கைகளைக் கொண்டுள்ளனர்.

பாகிஸ்தானியர்கள் யாரும் காணாமல் போகவில்லை என்று முதல்வர் கூறுகிறார். அதே நேரத்தில் துணை முதல்வர் 100க்கும் மேற்பட்டோர் மறைந்திருக்கலாம் என்று கூறுகிறார். சார்க் விசாக்களில் தங்கியுள்ள பாகிஸ்தானிய குடிமக்களை திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்து வருகிறது. அவர்கள் வெளியேறுவதற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது.
இதையும் படிங்க: திடீரென தலை வழுக்கை, விழும் நகங்கள்.. வினோத நோயால் மகாராஷ்டிரா கிராம மக்கள் அவதி..!