போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் பற்றி விசாரிப்பதற்காக வந்த ஒரு பெண்ணை, அங்கிருந்த அதிகாரி ஒருவர் 25 ஆயிரம் ரூபாய் பணம், உயர்ந்த ரக மது பாட்டில் வாங்கிக் கொடுக்கும்படி கேட்டதுடன் அந்தப் பெண்ணை உல்லாசத்துக்கும் அழைத்து இருக்கிறார். அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். கைதான போலீஸ் அதிகாரியில் பெயர் பிஜு (வயது 52). கேரள மாநிலம், கோட்டையம் காந்திநகர் போலீஸ் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் கடந்த சிலங்களுக்கு முன்பு பண மோசடி தொடர்பாக அந்த போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் இந்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வந்தது. புகாரின் மீது எந்த அளவுக்கு விசாரணை நடந்திருக்கிறது என்பதை விசாரிப்பதற்காக அந்த பெண் மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்தார். ஆனால் அப்போது இன்ஸ்பெக்டர் இல்லை. அங்கு பணியில் இருந்த உதவி சப் இன்ஸ்பெக்டர் பிஜுவிடம் அந்தப் பெண் விசாரித்து இருக்கிறார். அதற்கு அவர் இந்த புகாரின் பேரில் தொடர் விசாரணை நடத்த வேண்டும் என்றால் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: 6ஆம் வகுப்பு மாணவியிடம் அட்டகாசம் செய்த தமிழாசிரியர்.. பாடம் புகட்டிய போலீசார்..

மேலும் தான் குறிப்பிட்ட விலை உயர்ந்த பிராண்ட் மதுபாட்டிலையும் வாங்கி வரும்படி கூறியிருக்கிறார். அத்துடன் தன்னை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தால் புகாரை உங்களுக்கு சாதகமாக விசாரித்து முடித்து தருகிறேன் என்றும் உறுதி அளித்திருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் மதுக்கடைக்கு சென்று அவர் குறிப்பிட்ட 'பிராண்ட்' மதுபானத்தை வாங்கிக்கொண்டு நேராக கோட்டையம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்திற்கு சென்றார. போலீஸ் நிலையத்தில் நடந்தவற்றையும் முழுமையாக சொல்லி அதை புகாராகவும் எழுதிக் கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகளின் அறிவுரையின் படி, அந்த பெண் மது பாட்டில் மற்றும் ரசாயன பொடி தூவிய 25 ஆயிரம் ரூபாய் பணத்துடன் அவர் வரச் சொல்லி இருந்த மாங்கனம் என்ற இடத்தில் உள்ள ஹோட்டல் அறைக்கு சென்றார், அந்த பெண். பெண்ணின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்த பிஜு அவரைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தார். அப்பொழுது ஹோட்டலில் மறைவாக இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் வ கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: வேலியே பயிரை மேய்ப்பது போல.. நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர்.. போக்சோவில் கைது..!