பிரபல பாலிவுட் நடிகையும் மாடல் அழகியமான ராக்கி சாவந்த், மூன்றாவது திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறார். மணமகன் பாகிஸ்தானை சேர்ந்த நடிகர் டோடி கான். இஸ்லாமிய முறைப்படி திருமண சடங்குகளை செய்யவும் ராக்கி சாவந்த் முடிவு செய்து இருக்கிறார்.
பாகிஸ்தானில் திருமணம், இந்தியாவில் வரவேற்பு, சுவிட்சர்லாந்தில் தேன்நிலவு துபாயில் குடியேறுவது என திருமண கொண்டாட்டத்திற்கு விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறார், அவர் மணமகன் டோடி கான், நடிகர் மட்டுமல்ல போலீஸ் அதிகாரியும் ஆவார்.
"டைம்ஸ் ஆப் இந்தியா டெலிவிசன்" நிகழ்ச்சியில் ஒரு உரையாடலின் போது, "நான் பாகிஸ்தான் சென்றிருந்தபோது எனது முந்தைய திருமணங்களில் எப்படி துன்புறுத்தப்பட்டேன் என்பதை எனது வருங்கால கணவரிடம் கூறி இருந்தேன்" என்றார். "இந்தியர்களுக்கும் பாகிஸ்தானியர்களுக்கும் இடையிலான திருமணங்கள் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி மற்றும் புரிதலை மேம்படுத்துகிறது" என மணமகன் டோடி கான் கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க: ஸ்ரீதேவி மீது பைத்தியம்... பார்ப்பதற்காகவே நேரில் வரச்சொல்லி சம்மன் அனுப்பிய நீதிபதி..!

46 வயதான மைன் ஹூன் நா, மேலும் கூறுகையில் "இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது. பாகிஸ்தானியர்களை நான் நேசிக்கிறேன். அங்கு எனக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்" என்றார். தேன்நிலவு பற்றி குறிப்பிட்ட ராக்கி சாவந்த், பாகிஸ்தானில் திருமணம் இந்தியாவில் வரவேற்பு, துபாயில் குடியேறுவது என்பது உறுதியாகிவிட்டது. தேன்நிலவை சுவிட்சர்லாந்து அல்லது நெதர்லாந்தில்நடத்தலாம் என்று இருப்பதாகவும்' தெரிவித்தார்.
ராக்கி, முதலில் "பிக் பாஸ் 15" நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரித்தேஷ் ராஜ் சிங்கை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களின் திருமணம் பிப்ரவரி 2022 -ல் அந்த நிகழ்ச்சியோடு முடிந்து போனது. பின்னர் தொழிலதிபர் அடில் கான் துரனியை மணந்தார், ராக்கி சாவந்த். ஆனால் இந்த திருமணமும் விவாகரத்தில் தான் முடிந்தது.

ராக்கி சாவந்தின் உண்மையான பெயர் நீரு பேடா. 1978 ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி அன்று மும்பையில் பிறந்தார். பாலிவுட் கவர்ச்சி நடனம் 'பிக் பாஸ்' மற்றும் 'நாச் பாலியே' போன்ற 'ரியாலிட்டி ஷோ'க்களிலும் தோன்றி பிரபலமானவர்
இதையும் படிங்க: ஆண் நண்பருடன் படுக்கையறையில் ஜாலி… தந்தையிடம் கையும் களவுமாக பிடிபட்ட ஜான்விகபூர்..!