அமெரிக்க அதிபராக 2வது முறை வந்ததில் இருந்து இந்தியா உறுப்பினராக இருக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் மீது அதிபர் ட்ரம்ப் கடும்கோபத்துடன் இருக்கிறார். அந்த கோபத்தின் வெளிப்படாக 150 சதவீதம் வரிவிதிப்பேன் என எச்சரித்துள்ளார்.அமெரிக்க அதிபராக பதவிஏற்ற அன்று, இதேபோன்று பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த அதிபர் ட்ரம்ப் இப்போது 3வது முறையாக மிரட்டல் விடுத்துள்ளார். பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 10 நாடுகள் உள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றதிலிருந்தே அமெரிக்காதான் முன்னிலை, அமெரிக்காவை முன்னிலைப்படுத்தியே அனைத்து செயல்களையும் செய்துள்ளார். அதிபராக பதவி ஏற்ற அன்றே அதிபர் ட்ரம்ப் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இருக்கும் நாடுகள் ஒன்று சேர்ந்து அமெரிக்காவை ஓரம்கட்ட நினைத்தால், டாலருக்கு மாற்றாக புதிய கரன்சியை உருவாக்க முயற்சித்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்தார். பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 100% வரிகளை எதிர்கொள்ள நேரிடும். சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு எந்த கரன்சியையும் கொண்டுவர முடியாது.
இதையும் படிங்க: இந்தியாவில் ‘யாரோ ஆட்சிக்கு’ வர பிடன் அரசு 2.10 கோடி டாலர் செலவிட்டுள்ளது: அதிபர் ட்ரம்ப் சூசகம்

அவ்வாறு ஏதாவது ஒரு நாடு செயல்பட்டாலும், கடும் வரிவிதிப்பை சந்திக்க நேரிடும், அமெரிக்காவுக்கு குட்பை சொல்ல வேண்டியதிருக்கும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் “ பிரிக்ஸ் நாடுகள் எங்கள் டாலரை அழிக்க திட்டமிடுகின்றன.

புதிய கரன்சியை ஊருவாக்க முயல்கின்றன. நான் அதிபராக 2வது முறை வந்தபோது, முதல்வேலையாக, நான் சொன்னது, பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகள், அமெரிக்க டாலருக்கு மாற்றாக என்று பேசினாலோ, அழிக்க முயன்றாலோ அந்த நாட்டுக்கு 150 சதவீத வரிவிதிக்கப்படும். எங்களுக்கு பிரிக்ஸ் நாடுகளில் இருந்து எந்தப் பொருட்களும் தேவையில்லை, பிரிக்ஸ நாடுகள் கூட்டமைப்பை உடைத்து சிதறவிட்டுவிடுவேன். 150 சதவீத வரியை பிரிக்ஸ் நாடுகள் இதற்கு முன் கேட்டிருக்காது. என்ன நடந்தது என எனக்குத் தெரியவில்லை. பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் இருந்து எந்த சத்தத்தையும் நான் கேட்கவில்லை” எனத் தெரிவித்தார்
இதையும் படிங்க: 2 ட்ரில்லியன் டாலர் பற்றாக்குறை... அமெரிக்கா திவாலாகிவிடும் என எச்சரிக்கும் எலான் மஸ்க்...