மீண்டும் பாஜக - அதிமுக கூட்டணி உருவாகி இருக்கிறது. திமுக இதனை பொருந்தாக்கூட்டணி என விமர்சித்து வருகிறது. இந்தக் கூட்டணியால் திமுக உள்ளூர கலவரத்தில் இருப்பதும் கண்கூடாகத் தெரிகிறது.
இந்நிலையில் அதிமுக- பாஜக கூட்டணியை விரும்பும் நடுநிலை அரசியல் விமர்சகர் ஒருவர்,''தற்போதைய சூழலில் பாஜக- அதிமுக கூட்டணி காலத்தின் கட்டாயம். இன்றைய சூழலில் இந்த கூட்டணியானது வெற்றிபெறும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகவே தெரிகின்றது. காரணம் திமுகவின் தத்தித்தனமான ஆட்சியையும், எங்கு பார்த்தாலும் பாலியல் சீண்டல்கள் அனுதினமும் நடக்கின்ற கொலைகள் மக்கள் மத்தியல் ஒருவித பயத்தையும், திமுக மீது கடும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.

அதிலும் பொன்முடி போன்றோரின் பாலியல் பேச்சுக்களை கேட்போரின் மத்தியில் ஒருவித அறுவருப்பையே ஏற்படுத்துகிறது. எங்கும் ஊழல், எதிலும் ஊழல். சாராய போதை மட்டுமல்லாது கஞ்சாவின் போதையும் தமிழக இளைஞர்களை சீரழித்துவிட்டது. பள்ளிகளில் கஞ்சா பயன்பாடும் பொதுவெளியில் சிறுவர்கள் கூட சீரழிந்துகொண்டுள்ளார்கள்.
இதையும் படிங்க: அமித் ஷாவிடம் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை… அதிமுக- பாஜக கூட்டணியில் ட்விஸ்ட்..!

ஆட்சியாளர்களை வைத்து திமுகவினரின் சம்பாத்தியம் பல மோசமான வழிகளில் கோடிகளில் குவித்து வருகின்றார்கள். சமீபத்திய சாராய ஊழலில் நாற்பதாயிரம் கோடி ஊழல் என்கிறார்கள். கெஜ்ரிவாலை போன்றே ஸ்டாலினும் கைது செய்யப்படுவார்கள் என்கிறார்கள். ஆனாலும் திமுக குடும்பத்தில் மூன்று நான்கு பேர் வரை கைது இருக்கும் என்கிறார்கள். அதுமட்டும் நடந்துவிட்டால் திமுக கரைவேஷ்டிகளை தமிழகத்தில் காணவே முடியாது. அந்த சூழலில்தான் வாக்குவங்கி ஓரளவுக்கு திமுகவை விட அதிகமுள்ள அதிமுகவின் கூட்டணி தேவை எனும் சூழலில் பாஜக தலைமை அதிமுகவுடன் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டுவிட்டது.

இதுதான் காலத்தின் கட்டாயம். திமுகவை வீழ்த்துவதை மட்டுமே நோக்கமாக பார்க்கவேண்டும். அதனால் முந்தைய சம்பவங்களை விட்டுவிட்டு நோக்கத்தின் தன்மையை வைத்து பாஜக அதிமுக கூட்டணியை ஆதரிப்பது ஒவ்வொருவரின் கடமை. அதனை செம்மையாக நிறைவேற்ற பாடுபடுவோம்'' என்கிறார்.
இதற்கு எதிராக கருத்துத் தெரிவித்துள்ள திமுக ஆதரவாளர், ''தேர்தலுக்கு இன்னமும் ஒரு வருடம் முழுமையாக இருக்கும் நிலையில் இப்போதே கூட்டணியை அறிவித்திருப்பது மிகவும் தவறு. ஏனெனில் ஏற்கனவே பாஜக மாநில தலைவருக்கும் அதிமுக தரப்புக்கும் ஒத்துப் போகவில்லை. இப்படி ஏழாம் பொருத்தமாக இருக்கும் நிலையில் தேர்தல் வரை இன்னமும் ஒரு வருடம் இந்தக் கூட்டணி தாக்குப் பிடிக்குமா? என்பது சந்தேகமே. பாஜகவுக்கு புதிய மாநிலத் தலைவர் நியமிக்கப்பட்டு இருந்தாலும் அது இவர்களுக்குள்ளான பிணைப்பை அதிகப்படுத்த உதவுமா? என்றால் அதுவும் சந்தேகமே...

தேர்தலுக்கு சிறிது காலம் முன்பு கூட்டணியை உறுதி செய்து அறிவித்து சுடச்சுட தேர்தலை எதிர்கொண்டிருந்தால் அது நன்றாக இருந்திருக்கும். ஆனால் இன்னமும் இவ்வளவு காலம் இருக்கும் நிலையில் இப்பொழுதே கூட்டணியை அறிவித்திருப்பது மக்களிடம் அயர்ச்சியையே ஏற்படுத்தும். கூட்டணியை இப்போதே அறிவித்திருப்பதன் மூலம் இந்த கூட்டணியைப் பற்றி பல மீம்ஸ்களை உருவாக்கி கேலி கிண்டல் செய்வதற்கு ஏதுவாக இருப்பதற்கு இவர்கள் வழிவகுத்திருக்கின்றனர்.
சுருக்கமாக சொல்வதானால் தேர்தல் சமயத்தில் இந்த கூட்டணி மக்கள் மனதில் நமத்துப் போயிருக்கும். தேர்தலுக்கு முன்னரே இந்த கூட்டணி முறிந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை'' என்கிறார்.
இதையும் படிங்க: 'காங்கிரஸுடன் திமுக ஒட்டுண்ணி கூட்டணி: நீங்கள் செய்யாத துரோகமா..? விதவைகள் வாக்குறுதி என்னாச்சு கனிமொழி..?