சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து இளைஞர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்கள் வார்டிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் அங்கிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ராணிப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர், மருத்துவமனைக்கு வேலை தேடி வந்துள்ளார். நேற்றிரவு மது அருந்திவிட்டு மருத்துவமனை வளாகத்திலேயே உறக்கியவர், அதிகாலையில் பெண்கள் வார்டிற்குள் நுழைந்து, அங்கு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த 50 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக உடனடியாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மது போதையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த சதீஷை பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: முதலில் உதவி ..பின்னர் படுக்கை அழைப்பு ..சில்மிஷ ஓனரை கைது செய்த போலீஸ்

ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இன்று அதிகாலையிலேயே அரசு மருத்துவமனைக்குள் புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதலில் உதவி ..பின்னர் படுக்கை அழைப்பு ..சில்மிஷ ஓனரை கைது செய்த போலீஸ்