மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி வல்லாளபட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் நிலப்பரப்பில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு 07.11.2024 அன்று வேதாந்தாவின் கிளை நிறுவனத்திற்கு ஒப்புதல் வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்திய நிலையில் இன்று இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளதை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

நேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலையில் போராட்டக்குழுவைச் சேர்ந்த சிலர் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் அமைச்சர் கிஷன் ரெட்டியை டெல்லியில் சந்தித்து மனு அளித்தனர். அப்போது பாஜக சார்பில் அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கும் போராட்டக்குழுவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், அவர்கள் விவசாயிகள் மட்டுமே தவிர போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையும் படிங்க: டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

இதனிடையே நேற்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இத்திட்டம் ரத்து தொடர்பாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பு வெளியிடுவார் என தெரிவித்திருந்தனர். ஆனால் உடனடி அறிவிப்பு வெளியாகாததால் வெறுப்பான போராட்டக்குழுவினர் அண்ணாமலை தங்களை ஏமாற்றிவிட்டதாகவும், சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லாமல் மத்திய அரசை அதிகாரப்பூர்வமாக திட்டத்தை ரத்து செய்துவிட்டதாக அறிவிக்க வலியுறுத்தவும் வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

இதற்காகவே காத்திருந்த திமுக உடன்பிறப்புகள் ஒரு பக்கம் சோசியல் மீடியாக்களில் அண்ணாமலையை அவதூறாக விமர்சித்து மீம்ஸ்களை பறக்கவிட்டன. தற்போது அண்ணாமலை சொன்னது போலவே டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதை அடுத்து போராட்டக்குழுவினர் (அண்ணாமலையை நம்பி வாங்கி வைத்த...) பட்டாசுக்களை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “கொஞ்சம் பொறுத்தா உங்க குடியா கெட்டுடும்” - டங்ஸ்டன் போராட்டக்குழுவால் டென்ஷன் ஆன எச்.ராஜா!