காட்பாடி காந்தி நகரில் உள்ள எம்.பி கதிர் ஆனந்த் வீடு,மற்றும் அவர் நடத்தி வரும் கிங்ஸ்டன் கல்லூரியிலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். கதிர் ஆனந்த் வீட்டின் முன்பு துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை வீரர்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். 2 மணி நேரத்திற்கும் மேலாக காட்பாடி காந்திநகர் இல்லத்தில் சோதனை வேலூர் மாவட்டம், காட்பாடியில் எம்பி கதிர் ஆனந்த் வீடு, அவருக்கு சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரி, அமைச்சர் துரைமுருகன் வீடு, கிங்ஸ்டன் கல்லூரி, பூஞ்சோலை சீனிவாசன் வீடு, அவரது உறவினர் வீடு மற்றும் கிடங்கு ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
காந்திநகர் இல்லத்தில் அமைச்சர் துரைமுருகனும் வசித்து வருகிறார்
அமலாக்கத்துறை அதிகாரிகள் 35க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வேலூரில் தொகுதியில் போட்டியிட்டார் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக இருந்த போது கதிர் ஆனந்துக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. வருமானவரித்துறை சோதனையின் போது கதிர் ஆனந்துக்கு நெருக்கமானவர் என கூறப்படும் பூஞ்சோலை சீனிவாசனின் குடோனில் 11 கோடி ரூபாய் சிக்கியது. பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை... குற்றவாளி கதையை முடிக்க திட்டம் போட்டது யார் SIR??
தேர்தல் செலவுக்காக பணம் வைக்கப்பட்டிருந்ததாக கதிர் ஆனந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிற நிலையில் அமலாக்கத்துறையும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் இதில் நிகழ்ந்திருப்பதாக கூறி வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே சோதனை மேற்கொண்டு வந்தனர்.
வேலூர் மாநகர திமுக விவசாய அணி அமைப்பாளராக பூஞ்சோலை சீனிவாசன் உள்ளார்.

சென்னையில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பிற்காக சிஆர்பிஎப் வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.வேலூர் மாவட்டத்தில் ஐந்து தனிப்பிரிவு காவலர்களை அதிரடியாக வேறு சரகத்திற்கு மாற்றம் செய்து ஐஜி உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டம் கட்பாடி ஆய்வாளர், ஆனந்தன் அதிரடியாக இரவோடு இரவாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மாற்றம் ஐ ஜி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ‘மத்திய அமைச்சரவையில் திமுக இருக்கும்போது தமிழகத்துக்கு நடந்த துரோகங்கள்..! லிஸ்டு போட்டு உரக்கச் சொன்ன கே.எஸ்.ராதா..!