சமூக வலைதளங்களில் #GetOutStalin ஹேஷ்டேக் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. தற்போது வரை 13 லட்சம் பேர் இந்த ஹேஷ்டாக்கை பயன்படுத்தி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதனை பெரும் சாதனையாகக் கருதி பாஜகவினர் ஆங்காங்கே கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பாஜக நிர்வாகி ஹெ.ராஜா தனது எக்ஸ்தளப்பதிவில், ''10 லட்சம் ஹேஷ்டாக் சாதனை #GetOutStalin முக்கிய ஊடகங்களை வேண்டுமானால் தனது ஆக்டோபஸ் கரங்களால் திருக்குவளை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தினர் கட்டுப்படுத்தலாம்.
இதையும் படிங்க: அடித்து ஆடும் அண்ணாமலை & கோ.. செம்ம குஷி ஆகிப்போன பி.எல் சந்தோஷ்..!
ஆனால், சமூக வலைதளங்களை திமுகவால் ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது. ஆன்லைன் மெம்பராகி ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கும் பாஜக உறுப்பினர்கள் அனைவருமே, உலகத் தலைவர் நரேந்திர மோடி அவர்களின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவருமே ஒரு Human Media தான்... இது மோடியின் தாமரை படை! தமிழகத்தை காக்க வந்த தேசபக்தர்கள் படை'' எனத் தெரிவித்துள்ளார். இந்த சமூகவலைதள புரட்சிக்கு காரணம் 'Human Media' என ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டுள்ளார் ஹெச்.ராஜா.

இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பதிவில், ''தமிழக மக்கள் தங்கள் குரல்களை ஒலிக்கச் செய்கிறார்கள்.பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி அரசியலை ஒருபுறமும், தமிழகத்தை இருள் சூழ்ந்த சகாப்தத்தில் தள்ளிய திமுக அரசின் கொடூரமான ஆட்சியை மறுபுறமும் அவர்கள் காண்கிறார்கள்.

2026 ஆம் ஆண்டு வரும்போது, அவர்களின் மகத்தான தீர்ப்பு மாற்றத்தை ஏற்படுத்தும், மு.க.ஸ்டாலின் உங்களை பதவி நீக்கம் செய்யும்'' தெரிவித்துள்ளார்.
இந்த சமூக வலைதளப்போட்டி, திமுக மற்றும் பாஜக இடையேயான அரசியல் போட்டியை மேலும் தீவிரப்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், திமுகவின் பதில் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது அரசியல் வட்டாரத்தில் ஆர்வமுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாமலையின் சவால், சமூக வலைதளங்களில் நடைபெறும் இந்த டிரெண்டிங் போராட்டம், தமிழக அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துமா என்பது தேர்தல் களத்தில் வெளிப்படுமா? வரும் சட்டமன்றத் தேர்தல் ரிசல்ட்டில் தெரிந்துவிடும்.
இதையும் படிங்க: தப்பு பண்ணிட்டியே சிங்காரம்..! #GetOutStalin வெளுத்து வாங்கும் பாஜக..!