நள்ளிரவு நேரத்தில் சிப்காட் காவல் நிலையத்திற்குள் முகமூடியுடன் நுழைந்த இரு நபர்கள் திடீரென பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலைய வளாகத்தில் நள்ளிரவு நேரத்தில் முகமூடி அணிந்து கொண்டு நுழைந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை திடீரென வீசிவிட்டு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: அநீதியை எதிர்த்தால் இதுதான் கதியா? - பெட்ரோல் குண்டு வீசி உயிருடன் எரிக்கப்பட்ட இளைஞர் மரணம் - ராமதாஸ் ஆவேசம்!
சிப்காட் காவல் நிலைய வளாகத்திற்குள் நள்ளிரவு நேரத்தில் இருவர் முகமூடி அணிந்து கொண்டு புகார் மனு அளிப்பது போல மெதுவாக வந்துள்ளனர். இதனை போலீசார் கவனித்து கொண்டிருந்த நேரத்தில், திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை எடுத்து காவல் நிலைய வளாகத்திற்குள் வீசியதாக கூறப்படுகிறது.

உடனடியாக இருவரும் தப்பியோடிய நிலையில், மாவட்டத்தின் பல பகுதிகளை சேர்ந்த போலீசார் காவல் நிலைய எல்லைக்கு வருகை தந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகத்தின் பேரில் பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பெட்ரோல் குண்டு வீச்சு! இருவர் உயிருக்கு போராட்டம்! ராணிப்பேட்டையில் பரபரப்பு!