அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை எதிர்த்து நீதி கேட்டு எதிர்கட்சிகள் போராடி வருகின்றன. 'யார் அந்த சார்' என அதிமுக போராட்டம் நடத்தி வருகிறது. பாஜக, நாதக, தவெகவும் களத்தில் உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமாதாஸும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்திலுயர் நீதிமன்றமும் கடுமையாக பார்த்து அதிமுகவின் சிபிஐ விசாரணை கோரும் வழக்கில் பல உத்தரவுகளை பிறப்பித்தது.
அதில் முக்கியமான ஒன்று 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு, ரூ.25 லட்சம் நிவாரணம், ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை போன்றவை ஆகும்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை மாணவி விவகாரம் - உச்சநீதிமன்ற கதவை தட்டிய அதிமுக, பாஜக
இந்நிலையில் கடந்த டிச.31 வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டு வலுக்கட்டாயமாக அனைவரும் கைது செய்யப்பட்டனர். சீமானும் போராட அனுமதி மறுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் பாமக மகளிர் அணி சார்பில் அதே வள்ளுவர்கோட்டத்தில் மாணவிக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு சௌமியா அன்புமணி தலைமையில் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்து போராட்டம் நடத்த உள்ள வள்ளுவர் கோட்டத்தில் நூற்றுக்கணக்கான போலீஸாரை குவித்துள்ளது.
போராட்டம் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் போராட வள்ளுவர் கோட்டத்திற்கு வந்த சௌமியா அன்புமணியின் காரை போலீஸார் வழி மறித்து கைது செய்யப்பட்டார்.

அன்று சீமான் இன்று சௌமியா அன்புமணி கைது. போராட்டம் நடத்த உரிய அனுமதி பெற்றும் அறவழியில் போராடக்கூட அனுமதி மறுத்து கைது செய்வது என்னவகை ஜனநாயகம் என பாமகவினர் கொந்தளிப்புடன் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: ‘யார் அந்த சார்?’ ஆளுங்கட்சிக்கு தலைவலி கொடுக்கும் அதிமுகவின் கோஷம்...