காதலுக்கும் காமத்திற்கும் கண் இல்லை என்பார்கள். அதை நிரூபிக்கும் வகையில் உத்தரபிரதேச மாநிலம் ஹர்தாய் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கற்பால்பூர் கிராமத்தில் வசித்து வரும் ராஜு( வயது 45 )என்பவரின் மனைவி ராஜேஸ்வரி 36. இவர்களுக்கு திருமணம் ஆகி ஆறு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகேபிச்சை எடுத்துக் கொண்டிருந்த 45 வயதான நானே பண்டிட் என்பவருடன் ராஜேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசி தங்கள் காதலை வளர்த்துக் கொண்டனர்.
இதையும் படிங்க: ஆண்ட பரம்பரை என சொல்லகூடாதா ..இதிலும் அரசியலா ..கடுகடுத்த சபாநாயகர் அப்பாவு..!
இந்த நிலையில் திடீரென ஒரு நாள் பிற்பகல் 2 மணி அளவில் ராஜேஸ்வரி வீட்டிலிருந்து மாயமாகிவிட்டார். முன்னதாக அவர் தனது மகளிடம் மார்க்கெட்டுக்கு சென்று துணிமணிகளும் காய்கறிகளும் வாங்கி வருவதாக கூறி சென்றிருக்கிறார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. வீட்டை விட்டுப் போகும்போது எருமை மாடு விற்று வைத்து இருந்த பணத்தையும் அவர் எடுத்துச் சென்று விட்டார். கணவர் ராஜு பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

இதனால் மனைவி காணாமல் போனது குறித்து அருகில் உள்ள போலீஸில் நிலையத்தில் ராஜு புகார் செய்தார். அதில் "பிச்சைக்காரர் நானே பண்டிட் உடன் மனைவிக்கு இருந்த தொடர்பை குறிப்பிட்டு, அவருடன் மனைவி ஓடிப் போய் இருக்கலாம் "என்று சந்தேகம் தெரிவித்து இருந்தார்.

அதன் பேரில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 87-வது பிரிவின் கீழ் பெண்ணை கடத்தியதாக ராஜ் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். (இந்த பிரிவின்கீழ் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்க முடியும்.)
இதற்கிடையில் மூன்று நாட்களுக்கு பிறகு ராஜேஸ்வரியை போலீசார் கண்டுபிடித்து மீட்டு வந்து விட்டதாக, மகளிர் போலீஸ் அதிகாரி ஷில்பா குமாரி தெரிவித்தார். பிச்சைக்காரர் நானே பண்டிட்டை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
இதையும் படிங்க: "எம்ஜிஆர் அவதாரம் எடுக்கும் தளபதியே"..தேனியில் பரபரக்கும் த.வெ.க போஸ்டர்..!