உலகின் பல்வேறு நாடுகளிலும் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.தமிகத்தில் அரசியல் தலைவர்கள் , சினிமா நடிகர்கள் , பிரபலங்கள் என அனைவரும் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர் .

முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய கட்டிடங்கள், விமான நிலையங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கடற்கரைகள், கோயில்கள், தேவாலயங்கள் போன்ற பொது இடங்களில் ஏராளமான இளைஞர்கள் ஒன்று கூடி புத்தாண்டை வரவேற்றனர்.
இந்த நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் நகர தமிழக வெற்றிக் கழகம் சார்பாக பெரியகுளம் முக்கிய பகுதிகளில் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் 'வருகின்ற 2026 ஆம் ஆண்டு தமிழகத்தை காக்க புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவதாரம் எடுக்கும் தளபதியே' என வசனங்களுடன் பொதுமக்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்து போஸ்டர்கள் முக்கிய பகுதிகளில் பெரியகுளம் முழுவதும் ஓட்டப்பட்டுள்ளது.
புத்தாண்டு அதுவுமா எம்ஜிஆர் அவதாரம் எடுக்கும் தளபதியே என த.வெ.க கட்சியினர் ஒட்டிய போஸ்டரால் தேனியில் இருக்கும் அதிமுகவினர் ஆடிப்போயுள்ளனர்
இதையும் படிங்க: பழசை மறக்கலையே...எம்ஜிஆர் ஜெயலலிதா சிலைக்கு மரியாதை செய்த திமுக அமைச்சர் ..!
இதையும் படிங்க: அண்ணா பல்கலை விவகாரம்; அதிரடி காட்டும் அண்ணாமலை... மதுரை To சென்னை மகளிர் பேரணி