பசிப்பிணியை போக்கவும், சுகாதாரத்துறை மேம்படுத்தவும், கல்வியை பரவலாக்கம் செய்யவுமே முதற்கட்ட முயற்சிகள் செய்யப்பட்டன. இருப்பினும் அமெரிக்கா, சோவியத் ரஷ்யா போன்ற நாடுகளில் விண்வெளி ஆராய்ச்சிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. இந்தியாவும் தன் பங்குக்கு சுயஆர்வம் மிக்க விஞ்ஞானிகளால் சிற்சில ஆராய்ச்சிகளில் ஈடுபட்டது.

1969 ஆகஸ்ட் 15-ல் இஸ்ரோ என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. விக்ரம் சாராபாய் அதன் முதல் தலைவராக வீற்றிருந்து இன்றைய கட்டுமானங்களின் உயர்வுக்கு அடிகோலினார். அதன்பிறகு பொறுப்பேற்ற சதீஷ் தவான், அவரது காலத்தில் தான் இந்தியா முதன்முதலாக செயற்கை கோளை ஏந்தி செல்லும் சிறிய ரக ராக்கெட்டுக்களை பரிசோதித்து பார்த்தது. அப்துல் கலாம் தலைமையில் நடைபெற்ற முதல்முயற்சி தோல்வியில் முடிந்தபோது, நாங்கள் தோற்று விட்டோம் விரைவில் வெற்றி பெறுவோம் என சதீஷ் தவான் கூறினார். வெற்றி பெற்றபோது அப்துல் கலாமை தனியாக செய்தியாளர்களை சந்திக்க வைத்தார். சதீஷ் தவானின் இத்தகைய பண்பு இஸ்ரோவில் பல புதிய முயற்சிகளை அக்காலத்தில் வித்திட்டது.
இதையும் படிங்க: இந்திய ஜிடிபி(GDP) நடப்பு நிதியாண்டில் 4 ஆண்டுகளில் இல்லாத அளவு குறையும்: என்எஸ்ஓ முதல்கட்ட கணிப்பு...

அவரைத் தொடர்ந்து ராவ், கஸ்தூரி ரங்கன், மாதவன் நாயர், ராதாகிருஷ்ணன், கிரண் குமார், கே.சிவன், சோம்நாத் என இதுவரை 11 பேர் இஸ்ரோவின் தலைவர்களாக இருந்துள்ளனர். ஒவ்வொருவரின் பணிக்காலத்திலும் குறிப்பிடத்தக்க முன்னெடுப்புகளை இஸ்ரோ செய்துள்ளது. சந்திராயன் விண்கலம், மங்கள்யான் என உலகை திரும்பி பார்க்க வைத்த நிகழ்வுகள் நம் இஸ்ரோவால் சாத்தியமானது.
தற்போதுள்ள இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் பதவிக்காலம் முடியும் நிலையில், வி.நாராயணன் என்பவரை புதிய தலைவராக மத்திய அரசு அறிவித்துள்ளது. இவரது பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும். தற்போது கேரளாவின் செயல்பட்டு வரும் திரவ உந்து அமைப்பு மையத்தின் இயக்குநராக வி.நாராயணன் பணியாற்றி வருகிறார். மேலும் விண்வெளி போக்குவரத்து அமைப்பின் திட்ட மேலாண்மை கவுன்சில் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். 1984-ல் இஸ்ரோவில் சேர்ந்த வி.நாராயணன், ASLV, PSLV ஆகிய ராக்கெட்டுகள் உருவாக்கத்தின் போது உடன் பணியாற்றிய அனுபவமிக்கவர்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி.நாராயணன், தமிழ்வழிக் கல்வியில் பயின்று இன்று இஸ்ரோவின் தலைவர் பொறுப்புக்கு உயர்ந்துள்ளார் என்பது தமிழர்களாக நம் அனைவருக்கும் பெருமைதரத்தக்க விஷயமாகும். அவர் தலைமையில் இஸ்ரோ சீரிய நடைபயிலட்டும் என எல்லோரும் வாழ்த்துவோம்..
இதையும் படிங்க: இந்தியாவில் வாக்காளர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?.. அடேயப்பா, கேட்டா அசந்து போய்டுவீங்க