திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே மருத குலத்தை சேர்ந்த இயேசு ராஜன் - அன்பரசி தம்பதியினருக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இரு குழந்தைகள் உள்ளனர். இயேசு ராஜன் வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில் வீட்டில் அன்பரசி குழந்தைகளுடன் தனித்து வசித்து.
இந்நிலையில் அன்பரசி திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக அன்பரசி உயிரிழந்தது கொலையா தற்கொலையா என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அக்கம் பக்கம் மற்றும் அன்பரசியின் உறவினர்களிடையே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மீண்டும் ஒரு வேங்கைவயல்? அங்கன்வாடி மையத்தின் முன் மனிதகழிவு.. மதுபாட்டில்களை உடைத்து போட்டு அராஜகம்..
இதையும் படிங்க: சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை தான்.. வதந்திக்கு டாட் வைத்தது சிபிஐ..!