திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை 17 வது கொண்டை ஊசி பகுதியில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து தகவலை உறுதிப்படுத்துவதற்காக தாலுகா போலீசார் வனத்துறை அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு இருந்த அந்த ஆண் சடலத்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் உடல் அருகிலேயே வெடிபொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் உயிரிழந்தவர் யார், எதற்காக இங்கே வந்து உயிரிழந்தார், எப்படி உயிரிழந்தார், அவர் பக்கத்தில் வெளி மருந்து இருப்பதற்கான காரணம் என்ன என போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக இறந்து கிடந்த உடலின் அருகே இருந்த வெடிப்பொருட்கள் பெரும் சத்தத்துடன் வெடித்தது. அதில் இரண்டு போலிஸ் மற்றும் வனத்துறை அலுவலர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். காயமடைந்த போலீஸ் மற்றும் வனத்துறையினரை சக காவலர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். முன்னதாக மழையில் உயிரிழந்த நபர் கேரளாவை சேர்ந்தவர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து கொலைகாண காரணம் வெடி பொருட்கள் அங்கே வந்ததற்கான விவரங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கருவிலே பாலினத்தை கண்டறிந்த விவகாரம்.. அரசு மருத்துவர் உட்பட 9 பேர் சஸ்பெண்ட்..
இதையும் படிங்க: சொந்த பேத்தியிடமே சில்மிஷம் செய்த தாத்தா.. பள்ளி தலைமை ஆசிரியரால் வெளிவந்த உண்மை..!