திருவண்ணாமலை நகரம், அண்ணா நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் லோகேஷ். அதே பகுதியில் உள்ள ஓர் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவன். திருவண்ணாமலை திருநகர் பகுதியை சேர்ந்தவர் தனுஷ்குமார். அதே பகுதியில் உள்ள பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர். அதேப் போன்று திருவண்ணாமலை நகரம், அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன்.

லோகேஷ், தனுஷ்குமார் ,கண்ணன் ஆகிய 3 பேரும் நண்பர்கள். இன்று கண்ணனுக்கு பிறந்த நாள் என்று கூறப்படுகிறது. இதனால் நேற்றிரவு சுமார் 11.30 மணியளவில் திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் உள்ள தனியார் கியாஸ் கம்பெனி அருகில் நண்பன் கண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பேனர் வைக்க லோகேஷ், தனுஷ்குமார் இருவரும் முடிவெடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: முப்பது ஆண்டுகள் ஆட்சியில் இருப்போம் என்கிறார் அமித் ஷா.. எங்கள் வாரிசுகள் உங்கள் சட்டங்களை தூக்கி எறிவார்கள்... திருமா ஆவேசம்!

பின்னர், பிறந்த நாள் வாழ்த்து பேனர் மற்றும் தேவையான கயிற்றுடன் குறிப்பிட்ட இடத்துக்கு இருவரும் சென்றுள்ளனர். அங்கு இருவரும் பேனரை கட்டிக்கொண்டு இருந்தபோது மேல்பக்கம் தளர்வாக இருந்துள்ளது. இதனால் கயிற்றை இழுத்து கட்டுவதற்காக லோகேஷ் மற்றும் தனுஷ்குமார் இருவரும் அருகில் உள்ள மின்வாரிய டிரான்ஸ்பார்மர் மீது ஏறி உள்ளனர்.

அப்போது பேனர் கட்டும் இடத்தின் அருகே உயர் அழுத்த மின் வயர் இருந்ததை கவனிக்காத நிலையில் எதிர்பாராத விதமாக மாணவர்கள் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவம் இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்து மக்கள் உடனடியாக திருவண்ணாமலை நகர காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மதிய உணவுக்காக விடுதிக்குச் சென்ற மாணவி உயிர் திரும்பாத சோகம்.. நடந்தது என்ன?