கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைந்துடைந்தது. சமூக அறிவியல் தேர்வு இன்று நிறைவடைந்த நிலையில், ஈரோட்டில் தேர்வு எழுதிவிட்டு ஐந்து மாணவிகள் வீடு திரும்பாத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்த ஐந்து மாணவிகள் இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத சென்றுள்ளனர். ஆனால் தேர்வு முடிந்து மாணவிகள் வீடு திரும்பவில்லை என தெரிகிறது. இதனால் மாணவிகளை அவர்களது பெற்றோர்... நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடு என அனைத்து இடங்களிலும் தேடி வந்தனர்.
இதையும் படிங்க: கழிவறைக்குச் சென்ற அரசு பெண் ஊழியருக்கு நேர்ந்த பரிதாபம்; ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு...!

இருப்பினும் மாணவிகளை காணவில்லை என்பதால் பதற்றம் அடைந்த பெற்றோர், பவானி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காணாமல் போன மாணவிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

பொது தேர்வுக்கு சென்ற மாணவிகள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: ஈரோடு அருகே ரவுடி ஜான் வெட்டி கொலை.. முன்விரோதம் காரணமாக வெறிச்செயல்.. தப்ப முயன்றவர்களை சுட்டுப்பிடித்த போலீஸ்..!