நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் பிசியாக இருப்பது போல் கடந்த இரண்டு மூன்று நாட்களாக ரசிகர்களையும் பிஸியாகவே வைத்துள்ளார். அந்த அளவிற்கு அவருடைய படத்தின் போஸ்டர்களும், ட்ரெய்லர்களும், டீசர்களும் இணையத்தில் சுற்றி சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் சிவகார்த்திகேயனின் சிறு வயது புகைப்படம் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.
கிட்ஸ்கள் அனைவரையும் கவர்ந்தவர் என்றும் கோட் படத்தில் 'நான் போகிறேன் இனி நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்' என நடிகர் விஜய்யிடம் வாழ்த்து பெற்று அடுத்தடுத்து முன்னேறி வரும் சிவகார்த்திகேயனின் ஆரம்ப வாழ்க்கை கஷ்டம் தான். ரூமில் படுக்க இடமில்லாமல், இரவு பகலாக தனியார் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர், டான்ஸ் ஜோடி டான்ஸ், அது இது எது, விருது வழங்கும் விழா என அனைத்திலும் தொகுப்பாளராக இருந்து தன்னுடைய காமெடி திறமையாலும், நடிகர்களின் குரல்களை தன் வசப்படுத்தி, அதை தனக்குண்டான பாணியில் பேசி மக்கள் மனதில் தொகுப்பாளராக நீங்கா இடம் பிடித்தவர்.

சின்னத்திரையில் நீண்ட நாட்கள் ஆக தொகுப்பாளராக இருந்த இவருக்கு அடுத்த கட்ட பயணத்திற்கு உறுதுணையாக இருந்தது அட்லீ இயக்கத்தில் உருவான முகப்புத்தகம் என்ற குறும்படம், இதில் நடிக்க தொடங்கிய சிவகார்த்திகேயன் சில விளம்பரங்களிலும் நடித்து, பின் 2012 ஆம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான மெரினா படத்தில் நடித்து வெள்ளித்திரையில் கதாநாயகனாக தனது காலடியை பதித்தார். அதன் பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், ரஜினி முருகன் என படிப்படியாக வெற்றி படங்களை கொடுத்து இன்று பராசக்தி, மதராஸி இந்த படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: நினைவானது ரசிகர்களின் கனவு..! நிவின் பாலி ராக்...! மலையாள இன்டஸ்ட்ரி ஷாக்..!

சிவகார்த்திகேயன் நடிகராக இருந்தாலும், அவரும் தனது வாலிப வயதில் ஒரு தலை காதல் செய்தவர் தான். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசும் பொழுது இதை குறிப்பிட்ட சிவகார்த்திகேயன், தான் காதலித்த பெண்ணை வேறொருவர் காதல் செய்தாராம், ஆனால் அந்தப் பெண் வேறொருவரை காதல் செய்வதை அறிந்த சிவகார்த்திகேயன், அந்தப் பெண் தனக்கும் கிடைக்கவில்லை, மற்றொருவருக்கும் கிடைக்கவில்லை என்ற மகிழ்ச்சியில் இருந்ததாக கூறினார்.


இப்படி இருக்க, வெளியே பெண் தேடிய சிவகார்த்திகேயனுக்கு அன்று தெரியவில்லை சிறு வயதில் இருந்து ஒரு கண் தன்னை பின் தொடர்ந்து வருகிறது என்று. அதற்கு உதாரணமாக தற்பொழுது வலம் வருகிறது சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தியின் குழந்தை பருவ புகைப்படம். இன்று கையில் குழந்தைகளோடு இருக்கும் இவர்கள், அன்று குழந்தையில் எப்படி இருக்கிறார்கள் என்பதை பார்த்து ரசிகர்கள் ஆனந்தம் அடைந்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன், கையில் ஒரு ரூபாய் கூட இல்லாத காலத்தில் என்னை நம்பி திருமணம் செய்து எனக்கு உதவியாக இருந்த ஆர்த்தி, இன்று பிஸியாக நடித்து வரும் சூழலிலும் தனது மூன்று குழந்தைகளையும், தன்னையும், குடும்ப பொறுப்புகளையும் கையில் எடுத்து எங்களை சிறப்பாக வழி நடத்தி வருகிறார் என புகழாரம் சூட்டியிருந்தார்.

இந்த நிலையில், தனது மனைவியான ஆர்த்தியை எந்த நிகழ்ச்சிகளிலும் எந்த பேட்டிகளிலும் விட்டுக் கொடுக்காத சிவகார்த்திகேயன், சிறுவயதில் இருந்தே அவரை விட்டுக் கொடுக்காமல் இருந்திருக்கிறார் என்பதற்கு உதாரணமாக அமைந்திருக்கிறது இந்த புகைப்படங்கள்.
இதையும் படிங்க: விபத்தில் சிக்கிய நடிகர் யோகிபாபு.. அதிர்ஷடவசமாக உயிர் தப்பியதால் மகிழ்ச்சி..!