பாவேந்தர் பாரதிதாசனின் 135வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பாரதிதாசனின் பிறந்தநாள் தமிழ் வாரமாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

ஏப்ரல் 29(இன்று) முதல் மே 5ஆம் தேதி வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். தமிழ் உணர்விலும் குருதியிலும் கலந்த புரட்சி கவிஞரின் பிறந்தநாள் தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்ற முதல்வரின் உத்தரவுப்படி, அனைத்து மாவட்டங்களிலும் கவியரங்குகள், கருத்தரங்கங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இதையும் படிங்க: போலீசாருக்கு வார விடுமுறையை உறுதி செய்யுங்கள்..! மதுரை கோர்ட் கரார் உத்தரவு..!

இந்த நிலையில் பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு, துரைமுருகன், மேயர் பிரியா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மாநிலத்தில் சுயாட்சி! மத்தியில் கூட்டாட்சி...முதல்வர் போட்ட கணக்கு!