என்ன கல்யானம் பன்னிட்டு, அவ கூட ஹனிமூன் போயிட்டு வரியா டா ? பொம்பள பொறுக்கி ... ! என கோவை விமான நிலையத்தில் புதுமண தம்பதியைப் பார்த்து இளம் பெண் ஒருவர் வசைபாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோவை விமான நிலையத்தில் நேற்று இரவு சென்னையில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் பயணிகள், விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து ஒரு ஆணும், பெண்ணும் வெளியே வந்து கொண்டு இருந்தனர். அப்பொழுது அங்கிருந்த வேறு ஒரு இளம் பெண், திடீரேன அந்த ஆணை திட்டி வசைபாட ஆரம்பித்துவிட்டார். அனைவரது முன்னிலையிலும் "என்னை திருமணம் செய்து விட்டு அவளுடன் ஹனிமூன் போயிட்டு வரையாடா பொம்பள பொறுக்கி" என கணவனை தகாத வார்த்தைகளால் திட்டி வசைபாடினார்.

இதைத்தொடர்ந்து அங்கு இருந்த அந்த நபரின் அந்த நபரின் சொந்தக்காரர் ஒருவர் அந்தப் பெண்ணின் கையை பிடித்து இழுத்து சமரசம் செய்ய முயன்றார். அப்பொழுது அவரது கன்னத்தில் அறைந்த அந்த பெண், அவரது சட்டையைப் பிடித்துக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடம் தடுக்கச் சென்றபோது காசு இருந்தால் என்ன வேணும்னாலும் செய்வீர்களா என கேட்டு வாக்குவாதம் செய்தார்.
இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணி?... சிவி சண்முகத்திற்கு அடித்த ஜாக்பாட்...!

அங்கு இருந்தவர்களை பார்த்த அந்த பெண், இத்தனை பேர் நிற்கிறீர்கள் காரில் அவன் தப்பித்து செல்கிறார், யாரும் அவனை பிடிக்க முடியவில்லை ? என கேள்வி கேட்டு அங்கு இருந்தவர்களை திட்டினார். படம் பிடித்த பத்திரிகையாளர்களையும் பார்த்து கேள்வி கேட்டார். இதனால் கோவை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பீளமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக வெளியாகியுள்ள தகவலின் படி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த ஜோடி ஹனிமூன் முடித்துவிட்டு திரும்பிய புதுமண தம்பதி என்பதும், தன்னை காதலித்த் ஏமாற்றிய அந்த நபரைத் தான் இளம் பெண் இஷ்டத்திற்கு வசைபாடியதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 2026இல் திமுக ஆட்சிக்கு முடிவுரை.. NDA ஆட்சிக்கு தொடக்கவுரை.. டிடிவி தினகரன் ஒரே போடு.!!