ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் ரேடியோ நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி இந்திய மக்களிடைடே உரையாற்றி வருகிறார். அதன்படி ஏப்ரல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று பிரதமர் மோடி உரையாற்றினார். காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை பார்த்த ஒவ்வொரு இந்தியனின் ரத்தமும் கொதிப்பதை என்னால் உணர முடிகிறது.
இந்த தாக்குதல் சம்பவம், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பவர்களின் பதற்றத்தை காட்டுகிறது. அவர்களின் கோழைத்தனத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும். பயங்கரவாதிகளும், அவர்களை வழிநடத்துபவர்களும், காஷ்மீரை மீண்டும் அழிவுப் பாதைக்கு கொண்டு செல்ல விரும்புகின்றனர். எனவேதான் இப்படி ஒரு சதித்திட்டத்தை தீட்டி செயல்படுத்தி உள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில் நமது தேசத்தின் மகத்தான மன உறுதியை நாம் வெளிப்படுத்தியாக வேண்டும். இந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, நாம் என்ன செய்கிறோம் என்று உலகம் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறது. மொத்த நாடும் ஒரே குரலில் பேசிக் கொண்டிருப்பதை இந்த உலகம் பார்க்கிறது. அமைதி திரும்ப தொடங்கிய நேரத்தில், வளர்ச்சி பொறுக்காமல் காஷ்மீரை அழிக்க நினைக்கிறார்கள்.
பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் நமது ஒற்றுமையே பலம் என பிரதமர் மோடி பேசினார். இந்த நிலையில் பிரதமர் மோடி பங்கேற்று பேசும் மனதின் குரல் நிகழ்ச்சியை தமிழகத்தில் பொது இடத்தில் ஒளிபரப்ப அனுமதி மறுக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார்.
இதையும் படிங்க: அமித் ஷாவுக்கு அதுதான் பொழப்பே... நயினார் நாகேந்திரனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி...!

பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சிக்கு அனுமதி தராமல் மக்களை அலைக்கழித்த திமுக அரசின் அதிகாரப் போக்கு நியாயமற்றது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள நடுக்குப்பம் பகுதியில், தமிழக பா.ஜ., சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரதமர் மோடியின் 'மனதின் குரல்' என்ற வானொலி நிகழ்ச்சிக்கு கடைசி நேரத்தில் அனுமதி தராமல் மக்களை அலைக்கழித்த தி.மு.க அரசின் அதிகாரப் போக்கு நியாயமல்ல.
திமுகவினர் நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் உடனடியாக அனுமதியும் போலீஸ் பந்தோபஸ்தும் கொடுக்கும் திமுக அரசு, பிரதமர் மோடி நாட்டு மக்களோடு கலந்துரையாடும் மனதின் குரல் நிகழ்ச்சிக்கு இத்தனைக் கெடுபிடிகளை விதிப்பது ஏற்புடையதல்ல.

அதுவும் சுமார் 1000 பொதுமக்களுக்கு அறுசுவை விருந்துடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிக்காக, ஒரு வாரத்திற்கு முன்பாகவே தமிழக பாஜ சார்பில் காவல்துறையிடம் அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்போகும் இறுதி தருணத்தில் அனுமதியில்லை எனக் கூறி, எல்.இ.டி திரை, ஒலிபெருக்கி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த இடத்திலிருந்து நிகழ்ச்சியை வேறொரு புதிய இடத்திற்கு மாற்றியது தி.மு.க அரசின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் நோக்கமேயாகும்.
இருப்பினும் தி.மு.க அரசு குறிப்பிட்டிருந்த அந்த புதிய இடத்தில் எல்.இ.டி., திரைகள் அமைக்கப்படும் வரை ஒலிபெருக்கி மற்றும் கைப்பேசிகள் உதவியுடன் மக்களோடு மக்களாக அமர்ந்து பிரதமர் அவர்களின் மனதின் குரல் நிகழ்ச்சியைக் கண்டு களித்தோம் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார்.
இதையும் படிங்க: அண்ணாமலையை தவிர்த்த நயினார் நாகேந்திரன்... தொண்டர்களுக்கு போட்ட ஸ்ட்ரிக்ட் உத்தரவு...!