தொடர் சர்ச்சைப் பேச்சுக்களில் சிக்கிய அமைச்சர் பொன்முடி சைவ-வைணவ பேச்சால் கட்சிப்பதவியை இழந்தார். உயர்நீதிமன்றமும் கடுமை காட்டியதால் பொன்முடியும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கு கட்சியில் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் விழுப்புரத்தில் தொண்டர் ஒருவரின் செயலால் ஒட்டுமொத்த திமுக தலைமையே ஆடிப்போயுள்ளதாக கூறப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணைநல்லூர் பேரூராட்சி காந்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க. நகர ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பாக்யராஜ், அமைச்சர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டதால் கடும் விரக்தியடைந்தார்.
இதையும் படிங்க: நேற்று அப்செட்... இன்று ஆப்சென்ட்... கம்பி நீட்டிய 2 மாஜி அமைச்சர்கள்!

பாக்யராஜ் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். அருகில் இருந்த திமுக தொண்டர்கள் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தினர். இருப்பினும், ஆத்திரமடைந்த பாக்யராஜ், தனக்கு மோட்டார் பைக்கை தீ வைத்து எரித்தார்.
அமைச்சர் கொடுத்த இந்த பைக் எனக்கு தேவை இல்லை, அவர் பதவியே போச்சு எனக்கு எதுக்கு இந்த வண்டி என, என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மீண்டும் அமைச்சர் பதவியை பொன்முடிக்கு வழங்கு என்ற எச்சரிக்கையை தலைமைக்கு காட்டி பரபரப்பு காட்டி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
*விழுப்புரத்தில் திமுகவினர் கொதிப்பு 🔥*
பொன்முடி-யின் பதவியை பறித்த *ஸ்டாலினுக்கு எதிராக திமுகவினர்* தீக்குளிக்க முயற்சி வண்டியை எறித்தும் விழுப்புரத்தில் போராட்டம் ? pic.twitter.com/NxIzXu8bkC
— Ammasuresh8925@gmail.com Ammasuresh8925@gmail.com (@Ammasuresh89251) April 28, 2025
இதையும் படிங்க: இரு அமைச்சர்கள் நீக்கம்.. 2026இல் திமுக ஆட்சி அகற்றத்துக்கான தொடக்கப்புள்ளி.. அண்ணாமலை சரவெடி.!