கடந்த சில நாட்களாக தெரு நாய்கள் தொல்லை மீண்டும் அதிகரித்து வருகிறது. தெரு நாய்கள் சாலைகளை சுற்றி தெரிவதால் பொதுமக்கள் அவதி அடைகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் கூட்டம் கூட்டமாக சுற்றும் தெருநாய்களால் இருசக்கர வாகனங்களில் செல்வோம் பயத்துடனே வாகனத்தை இயக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

வாகனங்களில் வேகமாக செல்லும்போது நாய் துரத்தும், அந்த நேரத்தில் அச்சத்தால் நிலை தடுமாறி கீழே விழும் சம்பவங்களும் நிகழ்கிறது. அதிகாலை நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி செல்பவர்கள் இரவு நேரம் வேலை முடிந்து விடு திரும்புவோர், ரயில்களில் இருந்து இறங்கி வீடுகளுக்கு செல்பவர்கள், முதியோர் என அனைவரையுமே தெரு நாய்கள் அச்சமடைய செய்கின்றன.
இதையும் படிங்க: தொடரும் சோகம்; வெள்ளியங்கிரி மலையில் 2வது முறையாக அரங்கேறிய பயங்கரம்!

எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தெரு நாய்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1913 எண்ணை தொடர்பு கொண்டு, நமது புகார்களை தெரிவிக்கலாம் என்றும் chennaicorporation.gov.in என்ற மாநகராட்சியின் இணைய தளத்திலும் புகார்களை தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனுடைய ஸ்ரீபெரும்புதூரில் நாய் கடித்து சிகிச்சைகள் இருந்த எட்டாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கடந்த ஏழாம் தேதி எட்டாம் வகுப்பு மாணவர் விஷ்வா என்பவர் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த நாய் ஒன்று மாணவனை சரமாரியாக கடித்துள்ளது. இதனால் காயமடைந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மாணவர் உயிரிழந்துள்ளார். நாய் கடித்து சிகிச்சைகள் இருந்த மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 2026ல் அம்பேல்... தவிடு பொடியான விஜய்யின் அரசியல் கணக்கு... தவிக்கும் தவெக