அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்ட விரோதமானது என அறிவிக்க கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்த தடை கோரியும் தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தன.
இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழல்.. தமிழக அரசுக்கு ஃபைன் போட்டு மனுவை டிஸ்மிஸ் பண்ணுங்க.. நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு!
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ் மற்றும் என் செந்தில்குமார் அடங்கி அமர்வு, விசாரணையில் இருந்து விலகியதை அடுத்து, வழக்கை நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் கே ராஜசேகர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கிய நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 8ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வில் இடம் பெற்றிருக்கும் நீதிபதி கே ராஜசேகர், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞரின் சகோதரர் என்பதால், தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என மூத்த வழக்கறிஞர் கே எம் விஜயன், தலைமை நீதிபதி ஸ்ரீராம் தலைமையிலான அமர்வில் இன்று முறையீடு செய்தார்.
இது சம்பந்தமாக நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வில் முறையிடும்படி அறிவுறுத்திய தலைமை நீதிபதி அமர்வு, நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியன் தலைமையிலான அமர்வு எடுக்கும் முடிவின் அடிப்படையில் நிர்வாக உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் அடுத்த பரபரப்பு: 3 ஆண்டுகளில் ரூ.4,000 கோடி ஊழல்: அம்பலப்படுத்திய ED ஆவணங்கள்..!