கனவு காணுங்கள் அந்த கனவு உங்களை உறங்கவிடக் கூடாது என்ற அப்துல் கலாமின் வார்த்தைகளுக்கு இணங்க இன்றைய காலகட்ட மாணவர்கள் ஒவ்வொருவரும் அத்தனை சாதனைகளை படைத்து வருகின்றனர். ஒவ்வொரு சாதனையாளர்களின் வெற்றி, அவரவர் பள்ளி காலங்களில் இருந்தே தொடங்கி விடுகிறது.
அப்படி இங்கு தூத்துக்குடி மாவட்டம் அருகே அரசு பள்ளி மாணவர்கள் விமானத்தில் செல்வதை அவர்களது வாழ்க்கையின் கனவாக கொண்டு இருந்துள்ளனர். இதனை அறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியரான நெல்சன் பொன்ராஜ், மாணவர்களின் கனவை நினைவாக்க திட்டமிட்டுள்ளார்.

தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் ஐந்தாம் வகுப்பு படிக்கும் 10 மாணவர்கள் முன்னாள் மாணவர்கள் ஏழு பேர் இரண்டு பெற்றோர்கள் உட்பட 20 பேரை விமான மூலம் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் 5 கொலைகள்.. புள்ளிவிவரம் காட்டும் பாமக தலைவர் அன்புமணி..!
சென்னைக்கு சென்ற இவர்கள் ஒரு நாள் சுற்றுப்பயமாக பல்வேறு சுற்றுலாத் தலங்களை சுற்றி பார்த்தபின் ரயில் மூலம் மீண்டும் தூத்துக்குடி வர உள்ளனர். முன்னதாக இந்த பயணத்திற்காக தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேலாக செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தலைமை ஆசிரியரின் இந்த செயல் அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோரிடைய பெரும் வரவேற்பு மற்றும் பாராட்டுகளை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: கருணை அடிப்படையிலான வேலைக்காக 22 ஆண்டுகள் காத்திருப்பு.. அலட்சியம் செய்த ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு..!