தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த கிராமத்தைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய இளம்பெண் அவரது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரது தாய் அருகில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வரும் நிலையில் தந்தை கூலி வேலைப் பார்த்து வருகிறார். இதனால் மனவளர்ச்சி குன்றிய அவர்களது மகளை வீட்டில் தனியாக விட்டு விட்டு பெற்றோர் வேலைக்கு செல்வது வழக்கம். நேற்றும் (மார்ச் 30) அவர்கள் வேலைக்கு சென்றுள்ளனர்.

மாலை வேலை முடிந்து வீடு திரும்பியபோது வீட்டில் இருந்த மகள் தாயை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதுள்ளார். இதனால் பதறிப்போன அவரது தாய் என்ன என்று விசாரித்தபோது இளைஞர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து கதவை தாழிட்டு தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்து அழுதுள்ளார்.
இதையும் படிங்க: அரசு பள்ளியில் சத்துணவு ஊழியருக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் கைது!

இதனால் கலங்கிப்போன பெற்றோர் இதுகுறித்து உடனடியாக திருவிடைமருதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்ததில் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞர் பாலியல் தொல்லை அளித்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலியல் தொந்தரவு செய்த இளைஞரை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கத்தியை காட்டி மிரட்டி இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. இருவர் கைது