சென்னை மந்தைவெளி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் குளிர்சாதன பேருந்துகளில் பயணிக்க ஏதுவாக 2000 ரூபாய் மதிப்புடைய மாதாந்திர சலுகை பயண அட்டையை அறிமுகம் செய்து வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த பயண அட்டையை வாங்குபவர்கள் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் குளிர்சாதன பேருந்து, சாதாரண பேருந்து, விரைவு பேருந்து, சொகுசு பேருந்து, சிற்றுந்து மற்றும் இரவு நேர பேருந்துகளில் மாதம் முழுவதும் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: போதை மீட்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்த அமைச்சர் சிவசங்கர்..

மேலும் நாளொன்றுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பேருந்துகளில் பயணிக்கலாம் என்றும், முன்னதாக ஆயிரம் ரூபாய் பயண அட்டை வழங்கும் அனைத்து பகுதிகளிலும், தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2000 ரூபாய் மதிப்பிலான பயண அட்டையும் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா மேல்சபைத் தேர்தல்: பாஜக, சிவசேனா, என்சிபி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு.. காங்கிரஸ் ஜீரோ..!