தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி நவகிரக கோவில் சிறப்பு பஸ் சேவையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். பக்தர்களின் சிரமத்தை போக்கும் வகையில் இந்த பஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த பேருந்தானது கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு ஒரே நாளில் நவகிரக கோவில்களுக்கு சென்று பயணிகள் தரிசனம் செய்யும் வகையில் கடந்த ஓராண்டாக இயங்கி வருகிறது. இதில் வாரந்தோறும் சாதாரண பேருந்தில் நபர் ஒருவருக்கு 750 ரூபாயும், வாரம் மூன்று நாட்கள் மட்டுமே இயக்கப்படும் குளிர்சாதன பேருந்தில் ஒரு நபருக்கு 1350 ரூபாய் என பேருந்து கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் ஆண்டு துவக்கம் நாளான இன்று நவகிரக கோவிலுக்கு செல்லும் பயணிகளுக்கு மேள தாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது மட்டுமின்றி பக்தர்களுக்கு பூங்கொத்து இனிப்புகள் நவகிரக கோவில்களின் படங்களில் உள்ளடக்கிய சாவிக்கொத்து தண்ணீர் பாட்டில் தொப்பி நவகிரகங்கள் குறித்து குறிப்புகளை கும்பகோணம் கோட்ட போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி வழங்கி வரவேற்றார்.
இதையும் படிங்க: நாட்டிலேயே மிக உயரமான தங்க கோபுரம்... கோலாகலமாக நடந்த கும்பாபிஷேகம்..!

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, நவகிரக கோவில் சிறப்பு பேருந்து அமைச்சரால் துவங்கப்பட்ட போது வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டது. பிறகு மக்களின் கோரிக்கையை ஏற்று சாதாரண ரக பேருந்து வாரம் தோறுமும், குளிர்சாதனம் நிறைந்த பேருந்து இரண்டு நாட்களுக்கும் என இயக்கப்பட்டு வருகிறது.

தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் சிரமமின்றி வழிபட்டு செல்வதாக அமைச்சர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி இதுவரையில் இந்த சிறப்பு பேருந்துகளை சுமார் 22,000 பயணிகள் பயன்படுத்தியுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 55 கோடி பேர் புனித நீராடல் என்பது சுத்தப் பொய்..! புதிய சர்ச்சையை கிளப்பும் பிரசாந்த் கிஷோர்..!