உலகப் புகழ்பெற்ற நெல்லை டவுனில் உள்ள இருட்டுக்கடை அல்வா கடை மிகவும் புகழ்பெற்றது. சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக இருட்டுக்கடை அல்வா கடை செயல்பட்டு வருகிறது. அல்வா என்றாலே திருநெல்வேலி இருட்டுக்கடை தான் மக்கள் கண் முன் ஞாபகத்திற்கு வருகின்ற அளவிற்கு அதனுடைய சுவை உள்ளது.
பிஜிலி சிங் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த கடை தற்போது அவரது 3-ம் தலைமுறையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த அல்வா கடையை ஹரி சிங் என்பவர் நடத்தி வந்தார். ஆனால் அவர் கொரோனா தொற்றின் போது தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து இந்தக் கடையின் விவகாரம் பூதாகரமாக ஆனது. அண்மையில் இந்த கடையை நடத்தி வரும் கவிதா என்பவரின் மகள் திருமணத்தால் ஏற்பட்ட பிரச்சனை பூதாகாரமாக வெடித்தது.

இதைத்தொடர்ந்து இருட்டுக்கடையை தற்போது நயன் சிங்கின் சகோதரி கவிதா நடத்தி வருகிறார். இவரது மகள் கனிஷ்கா. இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கோவையைச் சேர்ந்த பல்ராம் சிங், என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற ஒன்றரை மாதத்திலேயே கனிஷ்கா தன்னுடைய கணவர் பலராம் சிங், வரதட்சணை கேட்டு தொல்லை செய்வதாகவும், இருட்டுக்கடை நிறுவனத்தின் உரிமத்தை மாற்றி தரக் கோரியும் மிரட்டல் விடுப்பதாக நெல்லை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்திருந்தார். அதை மறுக்கும் விதமாக கோவையைச் சேர்ந்த மணமகன் பல்ராம் சிங் தரப்பினர் செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். அதில் தாங்கள் வரதட்சணையாக அல்வா கடையை கேட்கவில்லை எனக்கூறினர்.
இதையும் படிங்க: இன்று ஆஜராகாத இருட்டுக்கடை ஓனர் மருமகன்.. 10 நாட்கள் அவகாசம் கேட்ட பல்ராம் சிங்..!

இந்த நிலையில் இந்தக் கடை தொடர்பாக பிஜிலி சிங்கின் உறவினர் ஜெயராம் சிங்கின் மகன் நயன் சிங் நெல்லை டவுனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது இந்த கடை தனக்கு சொந்தமான கடை என்றும் இந்தக் கடை தொடர்பாக 1999 ம் ஆண்டு தனது பெயரில் பிஜிலி சிங்கும் அவரது மனைவியும் உயில் எழுதி வைத்துள்ளதாகவும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் இந்த கடை தனக்கே சொந்தம்.
ஆனால் இந்த கடையை நீதிமன்றத்தின் மூலமாக சரியான நடவடிக்கை எடுத்து பெறுவோம். எனக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என்று நம்புகிறேன். இந்த கடையை நான் அடாவடி செய்து பிடிப்பதற்கு எப்போதும் முயற்சி செய்ய மாட்டேன். நீதிமன்றம் மூலமாக எனக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அதன் மூலமாக இந்தக் கடையை கைப்பற்றுவேன் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் திருநெல்வேலி இருட்டுக்கடைஉரிமையாளரான கவிதாஹரிசிங் மறுப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் தனது சகோதரர் நயன்சிங் நாளிதழில் கொடுத்துள்ள அறிவிப்பில் சொல்லியுள் ளதகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மைக்கு மாறானது என்று தெரிவித்துள்ளார் “நயன்சிங், போலியான உயிலை வைத்துக் கொண்டு இருட்டுக்கடையை அபகரிக்க முயற்சி செய்கிறார். கடந்த 2020 ஆண்டு முதல் கவிதா சிங் இருட்டுக்கடையை நிர்வாகித்து வருகிறார். சுலோச்சனா பாய் உயிரோடு இருக்கும் வரை நயன்சிங் எந்த சொத்துக்களுக்கும் உரிமை கூறியது இல்லை.
தற்பொழுது நயன் சிங் தயார் செய்துள்ள போலி உயில் எனது கட்சிக்காரரையோ இருட்டுக்கடையையோ பொருட்படுத்தாது. இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளார்.நயன் சிங் தற்போது நடத்திவரும் வாகையடி லாலா கடை எங்களது இருட்டுக்கடை உரிமையாளர் கவிதா மற்றும் நயன்சிங்கின் தந்தைக்கு பூர்வீக சொத்தை பிரித்ததன் அடிப்படையில் கிடைத்தது.மேலும் 2020 ஆம் ஆண்டு அவர் உயிரிழந்த பிறகு சொத்து பிரிக்கப்படாமல் உள்ளது.

இந்த சூழலில் கவிதாவிற்கு இந்த சொத்தில் இருக்கும் பங்கு கிடைப்பதற்கு திருநெல்வேலி இரண்டாவது உரிமையியல் நீதிமன்றத்தில் 2023 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்துள்ளார்.இந்த வாகையடி லாலா சொத்து வழக்கிற்காக மட்டுமே நயன்சிங் பதில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இருட்டுக்கடை தொடர்பாக எவ்வித வழக்கும் அவர் பதிவு செய்யவில்லை. ஆகவே நயன்சிங் கொடுத்த பொது அறிவிப்பை யாரும் நம்ப வேண்டாம் என்று இருட்டுக்கடைஉரிமையாளரான கவிதா மறுப்பு அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தலைவர பாத்தே ஆகணும்! பவுன்சர்களுடன் மல்லுக்கட்டும் தவெக தொண்டர்கள்…