திரேதா யுகத்தில் அயோத்தியில் ஸ்ரீ ராமச்சந்திரன் தோன்றியதை நினைவு கூறும் களையில் இந்துக்களால் ராமநவமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் ராமச்சந்திரன் என்று அழைக்கப்படும் அன்பான அவதாரமாக வெளிப்பட்டதாகவும் கலாச்சாரம், வீரம், கொள்கைகள், ஒழுக்கம், நல்லாட்சி, பணிவு மற்றும் துறவு ஆகியவற்றை எடுத்துக்காட்டும் பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

ராமநவமி என்பது ராமர் தனது மனித மற்றும் தெய்வீக வடிவங்களில் தோன்றியதை குறிக்கிறது. இந்தியா முழுவதும் ராமநவமி கொண்டாடப்பட்டாலும் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் ஆவணமே விழா விமர்சையாக கொண்டாடப்படும். ராம நவமிக்கு முன்னதாக, சைத்ர நவராத்திரியின் போது இந்துக்கள் ஒன்பது நாட்கள் விரதம் இருந்து வழிபடுகின்றனர்.
ராம நவமி ராமரின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் மதிக்கிறது. சொர்க்கத்திலிருந்து புதிதாகப் பிறந்த குழந்தையாக அயோத்தியில் ராமர் அவதரித்தார் என்றும் நம்பப்படுகிறது. ராமநவமி தினத்தன்று இந்துக்கள் தங்கள் வீடுகளில் பல்வேறு அலங்காரங்களை செய்து விரதம் இருந்து பக்தி கீர்த்தனைகள் பாடி ராமரை மனமுருகி வழிபடுவார்கள்.
இதையும் படிங்க: உத்தரகோசமங்கை கோவில் குடமுழுக்கு விழா..! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு..!

இன்று ராமநவமி கொண்டாடப்படும் நிலையில், அயோத்தியில் வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சரயு நதியின் புனித நீராடினர். ராமரைக் காண ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளதால் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல், மேற்கு வங்கத்தில் ராம நவமி கொண்டாட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராஞ்சி, ஜாம்ஷெட்பூர், கிரிதி, ஹசாரிபாக் போன்ற மாவட்டங்களில் ராம நவமி கொண்டாட்டம் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையிலும் அசம்பாவிதங்களில் தவிர்க்கவும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே ராமநவமி தினத்தை ஒட்டி பிரதமர் மோடி வாழ்த்துக்களை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்த வாழ்த்து செய்தியில், பிரபு ஸ்ரீராமரின் ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது நிலைத்திருக்கட்டும், நமது அனைத்து முயற்சிகளிலும் நம்மை வழிநடத்தட்டும். இன்று மாலையில் ராமேஸ்வரத்தில் இருப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் இறந்தால் ரூ.5 லட்சம் இன்சூரன்ஸ்.. திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவிப்பு..!