தினமும் வீட்டில் எது நடக்கிறதோ இல்லையோ சீரியல் பார்க்கும் நடைமுறை மட்டும் மாறாமல் நடந்து வருகிறது. என்ன தான் பல சீரியல்கள் வந்தாலும் அவை அனைத்தையும் பார்த்தே ஆக வேண்டும், இல்லை எனில் தூக்கமே வராது என்பதை போல் பலர் உள்ளனர். எப்படி வெள்ளித்திரைக்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறதோ, அதைவிட ரசிகர் பட்டாளம் இருப்பது சின்னத்திரைக்கு தான். ஒருவேளை சின்னத்திரை ஹீரோயின்கள் அரசியலில் குதித்து ஓட்டு கேட்டால் பல இல்லத்தரசிகளின் ஓட்டு அவர்களுக்கு தான் இருக்கும். சீரியல் பார்க்க விடாமல் தொந்தரவு செய்த கணவருக்கு அடி உதை என்று சொல்லும் அளவிற்கு வீட்டில் சீரியல்களின் ஆதிக்கம் உள்ளது. அந்த அளவிற்கு தொலைக்காட்சிகள் சீரியலில் பெண்கள், ஆண்கள், முதியவர்கள் என அனைவரையும் அடிமையாக்கி வைத்திருக்கிறது.

பல யூடியூப் சேனல்களை வாழ வைத்து கொண்டு இருப்பதே இந்த சீரியல்கள் தான். அப்படி என்ன தான் இந்த சீரியல்களில் காமித்து வருகின்றனர் என்று பார்த்தால் காலம் மாறாமல் இன்றும் மாமியார் மருமகள் சண்டை, பிடிக்காத திருமணம், கணவரை பழிவாங்கும் மனைவி, ஏழை பணக்கார வித்தியாசம் பார்க்கும் குடும்பம், பொறாமையில் வில்லனாக இருக்கும் உறவுகள், வீட்டிற்கு வந்த பெண்ணை கொடுமை படுத்தும் நாத்தனார் என பல கோணங்களில் பிரச்சனைகளை மட்டுமே வாழ்க்கையாக இருப்பது போல் காமிப்பர். இந்த பிரச்சனைகளையே இப்படி பார்க்கிறார்கள் என்றால் குடும்ப சண்டையை எப்படி பார்ப்பார்கள் என எண்ணி கொண்டுவரப்பட்ட "பிக்பாஸ்" நிகழ்ச்சியும் வெற்றி பெற்றது. ஏனெனில் விதை சீரியல் போட்டது.
இதையும் படிங்க: மரியாதையே கொடுக்கல.. இப்படி ஒரு நிகழ்ச்சி தேவையே இல்ல.. வெளியேறிய நடிகை..!

இந்த வரிசையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில், திரு பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், திருமுருகன் எழுத்து மற்றும் இயக்கத்தில் பூவிலங்கு மோகன், த.ச.ப.கே.மௌலி, திருமுருகன், ஸ்ருதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில், அண்ணன் தம்பி பாசம், மாமியார் மருமகள் பிரச்சினை, தங்கைகளின் பாரத்தை தாங்கும் அண்ணன் என குடும்ப உறவுகளை மையப்படுத்தி, 2010 முதல் 2015 வரை மாலை 7.30 மணிக்கு வெற்றிகரமாக ஓடிய மெகா தொடர் தான் "நாதஸ்வரம்".

இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த ஸ்ரித்திகா ஸ்ரீ பல சீரியல்களில் நடித்தாலும் இன்றளவும் இவர் பெயர் நாதஸ்வரம் மலர் என்றே அழைக்கப்படுகிறது. அந்த அளவிற்கு அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு சனீஸ் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டே வருடத்திற்குள் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதே போல் நிவேதிதா பங்கஜ் என்பவரை எஸ்.எஸ்.ஆர்.ஆர்யன் முதலில் திருமணம் செய்து பின் இருவரும் பிரிந்த நிலையில், எஸ்.எஸ்.ஆர்.ஆர்யன் மற்றும் ஸ்ரித்திகா ஸ்ரீ இருவரும் இரண்டாவதாக காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து, எஸ்.எஸ்.ஆர்.ஆர்யன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரித்திகா ஸ்ரீ கர்ப்பமாக இருப்பதாக கூறி, தனது மகிழ்ச்சியை வெளிக்காட்டி இருந்தார். இந்த நிலையில், வேளச்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக இவரது மனைவியான ஸ்ரித்திகாவின் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்த பதிவை பார்த்த ஸ்ரித்திகாவின் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: பயந்தா நாங்க பொறுப்பில்ல.. கும்பமேளாவில் திகிலூட்டும் திரில்லர் டீசர்..! மச்சக்காரி தமன்னாவ மந்திரவாதி ஆக்கிட்டியே டேரக்டரு..!