பயணிகளின் போக்குவரத்தை எளிமையாக்குவதற்கும் பயணிகளின் சிரமத்தை குறைப்பதற்கும் ரயில் பயணம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை தினம்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.
தமிழகத்தில் பெரும்பாலும் தென் மாவட்டங்களுக்கு தினம் தோறும் நூற்றுக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படவுள்ள நிலையில், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி தெற்கு ரயில்வே தென் மாவட்டங்களுக்கான ரயில் சேவையை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் நாகர்கோவில் தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் மே மாதம் 11-ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நீக்கப்படுகிறது. வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் தாம்பரம் நாகர்கோவில் சிறப்பு ரயில் மே 12ஆம் தேதி முதல் ஜூன் இரண்டாம் தேதி வரையிலும், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இயங்கும் தாம்பரம் திருவனந்தபுரம் ரயில் மே 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரையிலும்,
இதையும் படிங்க: மீண்டும் நெல்லை - மேட்டுப்பாளையம் இடையே ரயில் சேவை.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ஞாயிறன்று இயக்கப்படும் திருவனந்தபுரம் தாம்பரம் ரயில் மே 13ஆம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் ரயிலானது மே 11ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரையிலும், அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை இயங்கும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ரயில் சேவையானது மே 12ஆம் தேதி முதல் ஜூன் இரண்டாம் தேதி வரையிலும் நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: ரயில்களில் கூடுதல் சுமைகளுக்கு கட்டணம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!