தமிழில் 1958இல் வெளியான ’செங்கோட்டை சிங்கம்’ என்கிற படத்தில் புஷ்பலதா அறிமுகமானார். இதையடுத்து எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட பெரிய நடிகர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1964ஆம் ஆண்டில் லக்ஸ் சோப் விளம்பரத்தில் மாடலாக நடித்தார். 1980களில் ரஜினியின் ‘நான் அடிமை இல்லை’, கமல்ஹாசனின் ‘கல்யாணராமன்’, ‘சகலகலா வல்லவன்’ உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் புஷ்பலதா நடித்திருக்கிறார்.

ஏவி.எம் தயாரிப்பில் உருவான '‘நானும் ஒரு பெண்’ படத்தில் ஏ.வி.எம். ராஜனுடன் சேர்ந்து நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடைசியாக 1999ஆம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியான ‘பூவாசம்’ என்ற படத்தில் புஷ்பலதா நடித்திருந்தார். பிறகு நடிப்பிலிருந்து புஷ்பலதா ஒதுங்கிக் கொண்டார்.
சென்னையில் வசித்துவந்த புஷ்பலதா, உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் செவ்வாய்கிழமை (பிப்.4) மாலை புஷ்பலதா மாரடைப்பால் காலமானார். அவருடைய இறுதிச் சடங்கு சென்னையில் புதன்கிழமை (பிப்.5) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புஷ்பலதாவின் மறைவுக்கு திரை உலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அவரது மறைவுக்கு திரைத் துறையினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: டால்பி அட்மாஸ் ஒலியுடன் ரீ-ரிலீஸ் செய்யப்படும் தலைவரின் 'பாட்ஷா'! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
இதையும் படிங்க: ஜுன் 5-ல் Thug Life ரிலீஸ்... உறுதி செய்த கமல்ஹாசன்...