கோவை மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்களுக்கான 2 நாள் மாநாடு கோவை சரவணம்பட்டி அருகே குரும்ப பாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ். கல்லூரியில் நேற்று தொடங்கியது.

முதல் நாள் மாநாட்டில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மாநகர், ஈரோடு மேற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்தியம், சேலம் வடமேற்கு, சேலம் தெற்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு உள்ளிட்ட 10 மாவட்டத்தை சேர்ந்த 7,500 நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது பல்வேறு ஆலோசனைகளை விஜய் நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
இதையும் படிங்க: தொண்டர்கள் செய்த தரமான சம்பவம்.. தவெக நிர்வாகிகள் மீது வழக்கு..!

இந்த நிலையில், 2-வது நாளாக தமிழக வெற்றிக்கழகத்தின் பூத் கமிட்டி முகவர்கள் மாநாடு இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதற்காக தனியார் ஓட்டலில் தங்கியிருக்கும் விஜய் கார் மூலமாக மாநாடு நடைபெறும் இடத்திற்கு புறப்பட்டு சென்றார். தற்போது கருத்தரங்கம் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
இதையும் படிங்க: தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.. ஸ்தம்பித்தது கோவை..!